சில நேரங்களில்சில மனிதர்கள்....
இன்று நெருங்கிய நணபரின் மறைவையொட்டி அஞ்சலி செலுத்த சென்று இருந்தேன். அங்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வந்து என் அருகில் அமர்ந்தார்.தத்துவங்களை பேச்சினில் உதிர்ப்பார். உலகவாதங்கள் பேசுவார். பட்டாளி மக்கள் பற்றி பேசுவர்.
அவருடன் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. 2001ல் எனக்கு ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகளை பேசியதுண்டு. அப்போது அவரது விருப்பம் போல் ஆலோசனை வழங்கினார். ஆனால் ஆலோசனை கூறிய அவரே எனக்கு எதிர்முனையில் இருந்தவர் வீட்டுக்கு சென்று காலை உணவருந்தி விட்டு என்னைப் பற்றி புறம் பேசிவிட்டு வந்தார்.
இப்படிப்பட்ட ஒருவரிடம் எப்படி பேச முடியும்?
இதனால்விமானப்பயணங்களில் கூட இவரை பார்த்தும் முகம் கொடுப்பதை தவிர்த்து உள்ளேன். 16 வருடங்கள் கழிந்த இன்னிலையில் இன்றுஎன்னிடம் பேசுவதை ஏன் தவிர்க்கின்றீர்கள் என்றார்?
நதிநீர் பிரச்சனையில் முப்பது ஆண்டுகாலம் போராடி பெற்ற உத்தரவு போன்ற நிகழ்வுகள் என் பொதுவாழ்வில் அளித்த மகிழ்ச்சியை விட இவர்களால் மனம் ரணமானது அதிகம். உண்மையாக உழைத்தும்இந்த 17 வருடங்கில் எவ்வளவுவோ பின் அடைவுகள் அவமானங்கள்.....
நண்பர் என பாசாங்கு காட்டிய
இவர்களைப் போன்றோர்களால் அரசியலில் நான் இழந்தது போதும். இனியும் இழக்க வேண்டாம் என தவிர்க்கின்றேன் என பதில்அளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
சின்ன சின்ன விசயங்களில் எல்லாம் சில்லுண்டி வேலைகள் செய்யும் இவர்களா மக்கள் பிரச்சனைகளில் நியாயமாக நடந்துக் கொள்வார்கள்?
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14-07-2017
No comments:
Post a Comment