Monday, July 10, 2017

மணல்-தாது மணல் கொள்ளை




------------------------------
25 ஆண்டுகளாக தாது மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடந்த சென்னை உயர்நீதிமன்றம் குழு ஒன்று அமைத்தது. வழக்கறிஞர் சுரேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழு தனது விசாரணை அறிக்கையை இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் தாது மணல் குவாரிகளுக்கு 2013ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை மீறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தாது மணல் குவாரிகளுக்கு 2013ம் ஆண்டு உயர்நீதிமன்ற விதிக்கப்பட்ட தடை மீறப்பட்டு 86,000 டன் தாது மணல் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இருந்து தாதுமணல் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான இந்த தாது மணல் கொள்ளைக்கு மத்திய மாநில அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.  தாது மணல் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் அறிக்கையில்  கோரிக்கை விடுத்துள்ளார்.
........................
தமிழகத்தின் ஒட்டுமொத்த மணல் குவாரிகளின் ஒருநாள் வருமானம் ரூ.100 கோடி என்று இருக்கையில், ஆண்டு வருமானமே வெறும்ரூ.88 கோடி என சட்டப்பேரவையில்எடப்பாடி.ஆனல்
கோடிக்கணக்கில் பணம், கிலோக் கணக்கில் தங்கம்… அடித்த பணம் பரம்பரைக்கும், காலுக்கு போய் தலைக்கு வரும்..!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 48 மணல் குவாரிகளின் மூலம் தமிழக அரசுக்கு 2016-17 ஆம் ஆண்டில் கிடைத்த வருவாய் ரூ.86.33 கோடி மட்டுமே என்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

48 மணல் குவாரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.86.33 கோடி மட்டுமே வருவாய் கிடைப்பதாக வைத்துக் கொண்டால்,

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குவாரியிலும் ஒரு நாளைக்கு சராசரியாக 61 சரக்குந்து மணல் மட்டுமே அள்ளப்படுவதாகவும்,

48 குவாரிகளிலும் சேர்த்து 2928 சரக்குந்து மணல் மட்டுமே அள்ளப்படுவதாகவும் தான் பொருள் ஆகும்.

ஒவ்வொரு குவாரியிலும் மணல் எடுத்துச் செல்வதற்காக குறைந்தபட்சம் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு சரக்குந்துகள் வரிசையில் காத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் சரக்குந்து மணல் வெட்டி எடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் பல மணல் குவாரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சேகர் ரெட்டி என்பவர் வீட்டில் வருமானவரித் துறையினர் கடந்த ஆண்டு திசம்பர் மாதம் 9ஆம் தேதி நடத்திய ஆய்வில் ரூ.33.60 கோடி மதிப்புள்ள ரூ.2000 தாள்கள் உட்பட ரூ.140 கோடி பணமும், 180 கிலோ தங்கக்கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது பிணை மனு மீதான விசாரணையின் போது ரூ.33.60 கோடிக்கு புதிய ரூபாய் தாள்கள் எங்கிருந்து கிடைத்தன என்று கேட்டபோது,

அவை அனைத்தும் மணல் குவாரிகளில் இருந்து 25 நாட்களில் கிடைத்த வருமானம் என்று அவர் தரப்பில் கூறப்பட்டது.

அதாவது சேகர் ரெட்டிக்கு மணல் குவாரியிலிருந்து ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.1.35 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது.

2011-12ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது மணல் மூலம் கிடைத்த வருவாய் ரூ.188.03 கோடியாகும்.

2012-13ஆம் ஆண்டில் இது ரூ.188 கோடியாக குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே ரூ.133.37 கோடி, ரூ.126.02 கோடி, ரூ.91.02 கோடி என்ற அளவில் சரிந்து இப்போது ரூ.86.33 கோடியாககுறைந்திருக்கிறது.

உண்மையில் தமிழகத்தில் ஒரு
நாளைக்கு மணல் விற்பனை மூலமாக மட்டும் ரூ.100 கோடி வருவாய் கிடைக்கிறது.

ஆண்டுக்கு ரூ.36,500 கோடி வருமானம் கொட்டுகிறது. ஆனால்,அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும்கொள்ளையடித்தது போக எஞ்சிய சிதறலான ரூ.86.33 கோடி மட்டும் தான் தமிழக அரசின் கஜானாவில் சேர்க்கப்படுகிறது.

#மணல்கொள்ளை
#தாதுமணல்கொள்ளை
#sandquary
#KSRadhakrishnanpostings 
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-07-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...