சிதைக்கப்பட வேண்டிய சிந்தனைகள்.
-----------------------------------
இந்தியா சீனா எல்லையில் பதட்டம் நிலவும் வேளையில் " இந்தியா போரில் தோற்கட்டும்" என்ற பதிவுகள் கண்களில் படுகின்றன. இப்படியான பதிவர்கள்ஆபத்தானவர்கள். உள்நாட்டில் ஆயிரம் அரசியல் இருக்கலாம்.திராவிடம், தேசியம் என்ற மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அதற்காக அந்நிய நாட்டவரிடம் நாம் தோற்க வேண்டும், என்பதெல்லாம் ஆபத்தான சிந்தனைகள். அருவருப்பான பேச்சுகள். மரத்தின் உச்சியில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவது போன்றது. குறிப்பாக என்னை டேக் செய்து பதிவிடுவதை வன்மையாக
கண்டிக்கின்றேன்.
யாருக்கு யார் பாடம் நடத்துவது. இந்திய அரசியலை கடந்து உலக அரசியலை வாசித்தவன். கண்டவர்கள் எல்லாம் எனக்கு தமிழ் தேசியத்தையும் இந்திய தேசத்தையும் பற்றி கருத்து சொல்ல வேண்டாம். மரியாதைக் கருதி இப்பதிவில் கண்டனத்தை
தெரிவிப்பதோடு நிறுத்திக்
கொள்கின்றேன்.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-07-2017
No comments:
Post a Comment