குமரி மாவட்டம், உதயகிரி கோட்டை வாளாகத்தில் உள்ள டிலெனாய் நினைவிடம் போதிய பராமரிப்பின்றி புதர்களுக்குள் புதைந்து போகும் நிலையில் உள்ளது. குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள புலியூர்க்குறிச்சியில் உதயகிரி கோட்டை உள்ளது. சுமார் 98 ஏக்கரில் பிரம்மாண்ட பரப்பளவை கொண்டது இந்த கோட்டை வளாகம்.
இங்கு டச்சு வீரன் டிலெனாய் நினைவிடம் உள்ளது. வேணாட்டு மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சியின் போது 1741ல் குளச்சல் போர் நடந்தது. குளச்சல் துறைமுகத்தை கைப்பற்ற நடந்த போரில் டச்சுப்படையின் படைத்தளபதியாக இருந்தவர் ஹாலந்தில் பிறந்த யுஸ்டேஷியஸ் பெனடிக்ட் டிலெனாய். இப்போரில் டச்சுப்படையை மன்னர் மார்த்தாண்ட வர்மா முறியடித்தார்.
இதனால் டிலெனாய் உள்ள்ளிட்ட டச்சு வீரர்கள் பிடிபட்டு உதயகிரி கோட்டை வளாகத்தில் சிறை வைக்கப்பட்டனர். அக்காலத்தில் உதயகிரி கோட்டையானது சிறைக்கூடமாக செயல்பட்டது. சிறையில் இருந்து டிலெனாயின் வீரமும், திறமையும் மன்னர் மார்த்த்தாண்ட வர்மரை கவர்ந்த்து. இதனால் மன்னர், டிலெனாயை தனது படைத்தளபதியாக நியமித்தார். உதயகிரி வளாகத்திலேயே டிலெனாய் தனது குடும்பத்தாருடன் தங்கினார். திருவிதாங்கூர் படையை நவீனப்படுத்தினார்.
பீரங்க்கிகள், வெடி மருந்துகள் தயாரித்தார். படை வீர்ர்களின் எண்ணின்க்கையை 50 ஆயிரத்துக்கும் மேலாக உயர்த்தினார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தை குமரி முதல் கொச்சி வரை விரிவடைய செத்ர். இப்படி திருவிதாங்கூர் மன்னருக்கு விசுவாசமாக இருந்த டிலேனாய் 1777ல் காலமானார்.
டிலெனாய் மற்றும் அவரது மகன் ஜோனஸ் டிலெனாய், மனைவி மார்க்கரெட் டிலெனாய் ஆகியோரது நினைவிடங்கள் உதயகிரி கோட்டை வளாகத்தில் உள்ளது. இந்த நினைவிடம் சர்ச் போன்ற உருவ அமைப்பு கொண்ட கட்டிட வளாகத்தில் உள்ளது.
டச்சு படை தளபதியாக வந்து திருவிதாங்கூர் படையை நவீனமாக்கியதுடன் திருவிதாங்கூர் மன்னருக்கு விசுவாசமாக இருந்த அவரது நினைவிடம் மற்றும் உதயகிரி கோட்டைச்சுவர் இப்போது தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்ற டிலெனாய் நினைவிடத்தை வெளிநாட்டு பயணிகள் பலர் பார்க்க வருவதுண்டு. இத்தகைய பெருமை வாய்ந்த டிலெனாய் நினைவிடம் இன்று போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து உள்ளது. உயரமான இந்த கட்டிடத்தின் சுற்றுப் பகுதிகளில் புற்கள் வளர்ந்திருப்பதால் விஷஜந்துக்களுக்கு எவ்வித குறையும் இல்லை.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஜந்துக்களால் பாதிக்க்க் கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் கட்டிடத்தின் சுவர்களில் மரம், செடிகள் வளர்வதால் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் தொல்லியல் துறை சார்பில் ஒரு காவலாளி இருந்தார். அவரின் ஓய்வுக்கு பிறகு பாதுகாப்பிற்கு யாரும் இன்றி உள்ளது.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர் மா. பென்னி, கூறும்போது, குமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் பல தொல்லியல் துறையால் போதிய பராமரிப்பின்றி பாதுகாக்கப்படாமல் அழியும் நிலைக்கு தள்ளப்படுகிறது. குமரி மாவட்டத்தின் வரலாற்றை பிற்கால சந்ததிகள் அறியும் வண்ணம் அவற்றை பராமரிப்பது அவசியம்.
ஏராளமான சுவடிகளும் இந்த மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது. டிலெனாய் நினைவிடத்தை பாதுகாப்பதுடன், இங்கு வரலாற்று சின்னங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் துறை சார்பில் ஒரு அருங்காட்சியகம் அமைத்து அதில் கிடைக்கப் பெற்ற சுவடிகள், பொருட்கள் முதலியவற்றை காட்சிப்படுத்த வேண்டும் என்றார்.
#உதயகிரி_கோட்டை
#தக்கலை
#குளச்சல்
#கன்னியாகுமரி_மாவட்டம்
#டிலெனாய்
#திருவிதாங்கூர்_சமஸ்தானம்
#udayagiri_fort
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-07-2017
No comments:
Post a Comment