Monday, July 17, 2017

தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட ஐம்பது ஆண்டு பொன்விழா




-------------------------------------
ஜூலை 18, 1967 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் “ ‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்கிற தீர்மானத்தைக் கொண்டு வரப்பட்டது.

சென்னை மாகாணம் (Madras State)எனும் பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துசங்கரலிங்கனார் விருதுநகர் தேசபந்து திடலில் ஜூலை 27, 1956 இல் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார். 

அண்ணா, ம.பொ.சி., .ஜீவா,கக்கன் போன்றவர்கள் தியாகி சங்கரலிங்கனார்  சந்தித்து, உண்ணா நோன்பைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் தம் உண்ணாவிரத்தில் உறுதியாக இருந்தார். 76 நாட்கள் கடந்த நிலையில், அக்டோபர் 13, 1956 ல் உயிர் துறந்தார்.

நாடாளுமன்றத்தில் சென்னை மாகாணத்துக்கு, ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டுவதற்கான சட்ட முன்வடிவு நவம்பர் 23, 1968 அன்று நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பெயர் சூட்டு விழா டிசம்பர் 1, 1968 இல் பாலர் அரங்கத்தில் நடைபெற்றபோது, உடல் நலிவுற்ற நிலையிலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரை நிகழ்த்தினார்.
Picture from Daily Herald, 4 June, 1947. Look at the extant of Madras Presidency!
#Tamilnadu 
#madrasstate
#தமிழ்நாடுபெயர்சூட்டுவிழா
#சென்னைமாகாணம்

#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
17-07-2017

No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...