Thursday, July 13, 2017

யார் இவர்கள், உங்களுக்கு தெரியுமா?




இவர்கள் இந்திய நாடாளுமன்றத்தில்  நம்மாள் நமக்காக பணியாற்ற  தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள்.  இவர்கள்  மக்களவையில் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பது பற்றி நாம் கனவு காண்பதை தவிர்ப்போம். ஆனால் ஒரேக் கட்சியை சேர்ந்த இவர்கள்  எம்.பிக்கள் குழு என்ற பெயரில் கதிராமங்கலம் சென்று மக்களை சந்திக்க தடையாக இருப்பது எது? மக்களைப் பற்றிய சிந்தனைகளே இல்லாதவர்கள் தான் மக்களவை உறுப்பினர்களா? 

எல்லாரும் இந்நாட்டு மன்னர், இந்திய  ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பது எக்கேடு கெட்டவர்களும் அரசியலுக்கு வரலாம் என்பதற்கு வழி  விடக்கூடாது. அந்தந்த கட்சியின் தலைமை குறைந்தபட்ச பொறுப்புடன் செயல்பட்டால் தானே ஆரோக்கியமான அரசியல் இருக்கும்.   மக்கள் நல்வாழ்வுக்கு பயனாக இருக்கும். யார் சிறந்த அடிமைகள் என தேர்வு செய்து அவைக்கு அனுப்புவது எப்படி  ஆரோக்கிய அரசியலாகும்? இவற்றை எல்லாம்  பார்க்கும் போது வரம்பு உள்ள  ஜனநாயகம் அவசியம் என யோசிக்க வைக்கின்றது.

என்னுடைய நூலகம் பெரியது என நண்பர்கள் அறிவர். சமீபத்தில் நான் படித்த சில புத்தகங்கள் கூட' வரம்புள்ள ஜனநாயகத்தின்' அவசியத்தை உணர்த்தியது. என்னுடைய நூலகத்தில் உள்ள democracy குறித்து பல்வேறு புத்தகங்கள் வரம்புள்ள ஜனநாயகம் குறித்தும் வலியுறுத்துகின்றன. அவற்றில் Democracy a reader 
Edited by Ricardo Blaug & John Schwarzmantal எனும் புத்தகம் இதனை அழுத்தமாகவும் தெளிவாகவும் வலியுறுத்துகின்றது.   

 'தகுதியே தடை '
என நான் அடிக்கடி சொல்வது உண்டு. உன் தகுதியை நீயே கூறு பிறருக்காக காத்திருக்காதே!-ஜீலியஸ்சீசர்; ஆனால்
தகுதியானவர்களை பின்னுக்கு தள்ளும் தகுதி  இல்லாதாரை தடை செய்யும் நடவடிக்கை அவசியம் என சிந்திக்க வைக்கின்றது. தகுதியானவர்களை தகுதியான இடத்தில் வைக்கும் போது தான் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண  முடியும். இல்லையெனில்  மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் மக்களவை உறுப்பினர்கள் நாடு முழுக்க சுற்றுலா சென்று வருவதற்கு மட்டுமே நமது வாக்கு பயனாகும். மக்கள் பிரச்சனை தீராது. 

#மக்களவைஉறுப்பினர்கள்
#அயோக்கியஅரசியல் 
#ஜனநாயகஅரசியலின்ஆபத்து 
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
13- 07-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...