Wednesday, July 19, 2017

தான்தோன்றிகள் தன்னை தலைவராக கருதுவார்கள்.

தமிழக அரசியலில் தியாகங்கள் பல செய்த மூத்த தலைவர்கள்; கலைஞர், பேராசிரியர், கம்யூனிஸ்ட் இயக்க சங்கரய்யா , ஆர்.நல்லகண்ணு,மற்றும் பழ.நெடுமாறன், குமரி ஆனந்தன், துளசி அய்யா வாண்டையார், கி.வீரமணி, தக்கலை முகமது இஸ்மாயில் ( காமராசரின் நம்பிக்கைக்கு உரியவர், பழைய ஸ்தாபன காங்கிரசுக்கு சட்டமன்றத்தில் நீண்ட காலமாக குரல் கொடுத்தவர் ஆனால் மக்களுக்கு இவரை தெரியாது. கஞ்சா கருப்பை தெரியும்)  இவர்கள் மட்டுமே  நானறிந்த வரையில்  மக்களுக்கு மதியுரைக்கவும்,  அறிவுறுத்தவும்  தகுதி உடைய இன்றைய நம்மோடுயுள்ள மூத்த தலைவர்கள்.  



சுயம்பபிரகாச அரசியலில் , பொதுவெளியில் புரிதல் இல்லாமல் வரையறை அறியாமல் ஆலோசனை வழங்குவது தான் வேடிக்கையாக உள்ளது. 

சமூக வளைதளங்களில் கணக்கு தொடங்கிய கையுடன் கருத்து சொல்லி அதே சமயத்தில் தங்களின்  தொழிலில் சற்றும் சரிந்துவிடாமல் பார்த்துக் கொண்டு சமூக அக்கறை இருப்பதாக காட்டிக் கொண்டு முதல்வர் கனவு காண்கின்றார்கள். 

பொழுதுபோக்கு என்பது வேறு, பொதுநல அரசியல் பணி என்பது வேறு. ஆனால் இவர்களுக்கும் நாலு கோடி வாக்களிக்கும் மக்களே குற்றவாளிகள்.  மக்களிடம் மாற்றம் இல்லாத வரை  தான்தோன்றிகள் தன்னை தலைவராக கருதுவார்கள்.

#மூத்ததியாகஅரசியல்வாதிகள். 
#கருத்துரைக்கும்தான்தோன்றிகள்.
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
19-07-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...