உச்ச நீதிமன்றம் கடந்த 27/02/2012ல்
எனது வழக்கு எண். Writ Petition (C) 668/2002, நதிகளை தேசியமயமாக்கப்பட்டு, கங்கை – மகாநதி
– கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி
– வைகை – தாமிரபரணி – குமரி முனையில் உள்ள நெய்யாறோடு
இணைத்து கங்கை குமரியை தொட வேண்டுமென்றும்; கேரளாவிலுள்ள அச்சன்கோவில் – பம்பை
என்ற நீர்ப்படுகைகளை தென்மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்திலுள்ள வைப்பாறோடு
இணைக்க வேண்டுமென்றும்; கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் 82 நதிகள் சிலவற்றில் கடலுக்கு
செல்லும் உபரி நீரை குமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல்,
கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டம் பயன்படும் வகையில்
தமிழகத்திற்கு திருப்ப வேண்டுமென்று கோரிக்கைகளை வைத்து தாக்கல் செய்த மனுவில் தான்
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக்,
சுதந்திர குமார் ஆகியோர் தீர்ப்பினை வழங்கினர். தீர்ப்பு வழங்கப்பட்டு 6 ஆண்டுகளை நெருங்குகிறது.
30 ஆண்டுகளாக இந்த வழக்கிற்காக அலைந்து திரிந்து ஒரு நல்ல தீர்ப்பை பெற்ற பின்னும்
முழுமையான செயல்பாடுகள் இல்லாமல் திருப்தியற்ற
நிலை.
அத்தோடு
இதுகுறித்து இந்த தீர்ப்புக்கு முன் 1990ல் அன்றைய பிரதமர் வி.பி.சிங், 1992ல் பிரதமராக
இருந்த பி.வி.நரசிம்மராவ், 1996ம் ஆண்டு இறுதியில் பிரதமராக இருந்த எச்.டி.தேவகவுடாவை
சந்தித்து இக்கோரிக்கைளை எழுத்து வடிவில் வழங்கிய பொழுது வி.பி.சிங்கும், பி.வி.நரசிம்மராவும்
ஆர்வமாக கேட்டது உண்டு.
தேவகவுடாவோ எங்கே தண்ணீர் இருக்கின்றது திருப்ப என்று எதிர்வினையோடு பேசினார்.
தீர்ப்புக்கு பின் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ஹரீஷ் ராவூத்தை 2 முறை சந்தித்தும், இன்றைக்கு நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் உமா பாரதியை சந்தித்து உச்சநீதிமன்ற தீர்ப்போடு முழுமையாக விவாதம் நடத்தியும் பணிகள் ஆமை வேகத்தில் உள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் அளித்ததன் பின் மத்திய அரசு குறித்து பி.என்.நவலவாலா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
இது குறித்து மத்திய அரசு தரப்பில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்று தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 6ன் கீழ் பிரதமர் அலுவலகம், கேபினட் செயலாளர்
அலுவலகம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்திற்க்கு முறைப்படி
27/07/2017 ல் உரிய மனுவை செய்துள்ளேன்.
இதற்கு மேல் சரியான நடவடிக்கை மேற்கொள்ள இயலவில்லை எனில் உச்சநீதிமன்ற ஆணையை அவமதித்தன் பேரில் வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளேன்.
இதற்கு மேல் சரியான நடவடிக்கை மேற்கொள்ள இயலவில்லை எனில் உச்சநீதிமன்ற ஆணையை அவமதித்தன் பேரில் வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளேன்.
#நதிநீர்_இணைப்பு_வழக்கு
#தகவல்_அறியும்_உரிமை_சட்டம்
#உச்சநீதிமன்ற_தீர்ப்பு
#right_to_information_act
#rti_act
#right_to_information_act
#rti_act
#supreme_court_order
#river_networking_case
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-07-2017
No comments:
Post a Comment