ஏதோ சில காரணங்களால் ஊரை விட்டு சென்ற உத்தமர்களுக்கு சமர்ப்பணம்.................
காணாமல் போன கிராமத்தின் நிழல்கள்.....
மண் சாலையில் பயணித்தும் விளையாடியும் வளர்ந்த கால்கள்
இன்று சிமெண்ட் சாலையாக இருந்தும் ஏனோ
அதில் செல்ல மனிதர்கள் தான் இல்லை.....
நாங்கள் பந்தடித்து வளர்ந்த இந்த தெருவில் பல பெரிசுகளின்
ஏச்சுகளும் பேச்சுகளும் தான் அதிகம்
ஏனோ இன்று அந்த பெரிசுகளும் இல்லை
யாருமற்று கிடக்கிறது இந்த சாலை..........
மாலை நேரத்தில் கை பம்பில் தண்ணீர் கொண்டு வர
சொல்லும் பெண்களுக்கு எங்களின் பந்தடிகள் பழகிய ஒன்று ...........
இன்று பல தண்ணீர் குழாய்கள் இருந்தும்
தண்ணீர் பிடிக்க கூட்டம் இல்லை......
ஒவ்வொரு பருவத்திலும் ஒன்பது குழந்தைகளாவது இருக்கும் இன்று
ஒரு குழந்தைக்கும் விளையாட யாரும் இல்லை....
மார்கழி மாத பூ கோலங்காளில் நடனம் ஆடும் தெருக்கள்
எல்லாம் மயானமாய் காட்சியளிக்கிறது.......
பசுமையான இலைகளுடன் நிழல் தரும் மரங்கள் எல்லாம் தன்
கண்ணீராக இலைகள் உதிர்த்து சருகுகளுடன் சாக காத்திருக்கிறது...
இந்த மனிதர்களற்ற இந்த கிராமத்தில் ....
தேய்பிறையான கிராமங்கள்
வளர்பிறையான நகரத்தை பார்த்து ஏங்குகிறது
என்னை அழித்து கொண்டு இருக்கிறாய் என்று.......
ஓடிக்கொண்டே இருக்கிறான் மனிதன் மட்டும் ந(ர)கரத்தில்.....
No comments:
Post a Comment