தெக்கத்தி கரிசல் பூமியின் ஒரு கிராமத்தில் இருந்து சென்னை மயிலாப்பூரில் குடியேறி
40 ஆண்டுகளுக்கு மேலாகியும் சென்னை நகரம் மனதளவில் ஒட்டாத ஒரு நகரமாக இன்றைக்கும் உளவியல்
ரீதியாக உள்ளது. என்னதான் அன்றாட ஆதாரப் பணிகளுக்காக சென்னையில் ஓடி ஆடித் திரிந்தாலும்
ஒரு வெறுமையான வேற்றுமை தெரிகின்றது. சென்னப்ப நாயக்கர் காலத்தில் மீனவ கிராமமாக இருந்த
இந்த நகரம் இன்றைக்கு பரந்த பல்வேறு பகுதிகளில் இருந்த குடியேறிய மக்கள் கொண்ட
பெரு நகரமாகிவிட்டது.
என்னதான் இருந்தாலும் கிராமத்தில் கிடைக்கின்ற சுத்தமான காற்றும்,
அசலான சுவை நீரும், வெள்ளந்தி மக்களும், காய்கறிகளும், குளத்து மீனும், நாட்டுக் கோழியும், ஆட்டிறைச்சியும் இங்கு கிடைப்பதில்லை. கிராமத்தில்
செக்கில் ஆட்டிய நல்லெண்ணையிலும், கடலை எண்ணெயிலும் அதற்கேற்றவகையில் சைவ, அசைவ சமையல்
செய்யும் ருசியே தனி தான். இங்கே சென்னையில் நாட்டுக் கோழியே பிளாஸ்டிக் போல இருக்கின்றது.
என்ன செய்ய நாயர் பிடித்த புலிவால் கதை தான். ஓடவும் முடியவில்லை. இருக்கவும் முடியவில்லை.
விலகவும் முடியவில்லை.
#சென்னை_மாநகரம்
#சென்னை
#Madras_city
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-07-2017
No comments:
Post a Comment