Friday, July 7, 2017

நாடு எங்கே செல்கின்றது.

நாடு எங்கே செல்கின்றது.

திரைப்பட நடிகர் ஒருவருக்கு முகநூலில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தங்களின் விருப்பத்தை,likes தெரிவித்து இருப்பதாக வாசித்தேன்.

பிக்பாஸ் எனும் இன்னொரு நிகழ்ச்சி.  ஆனால் மனிதர்களை ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்து மனநிலையை அறிகின்றார்களாம். மிருகங்களை கூண்டுக்குள் அடைத்து வைத்தால் மிருகவதை தடுப்பு சட்டம் காப்பாற்றும். மனிதர்களை இப்படி அடைத்து வைப்பது மனித உரிமை மீறல் அன்றோ?  

கதிராமங்கலத்தில் வயல்வெளிகளில் தீப்பிழம்புகள், குடிநீரில் பெட்ரொலிய எண்ணெய் கலந்து வருகின்றது. ஜி.எஸ்.டி , மருத்துவ பட்டப்படிப்பில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு. நீராதார பிரச்சனைகள், உணவளிக்கும்  விவசாயிகள் போராட்டம் இவைகள் எல்லா இதே மாநிலத்தின் பிரச்சனைகள் தான். ஆனால் இதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் சின்னத்திரையையும் , வெள்ளித்திரையையும்  ரசித்துக் கொண்டிருக்கின்றனர் மக்கள். 

நாடும் , நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.

#சினிமாக்கவர்ச்சி 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-07-2017

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...