எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் கூறி நழுவும் அரசாங்கம், ஆளுனர்களே ஆளுபவர்களாக மாறி விட்டது,
ஒவ்வொன்றிலுமே தங்களுக்கு ஏதாவது பலன் இருக்கிறதா என எண்ணி செயல்படும் அரசியல் பிழைப்பு நடத்தும் கட்சிகள், தங்களுக்கு பலன் இருந்தால் மட்டுமே அதை செய்தியாக்கும் ஊடகங்கள், இவைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு வந்தால் மட்டுமே அது பாதிப்பு என நினைக்கும் மக்கள். நடிகர்களை பூஜிப்பது.தொலைகாட்சி தொடர்கள், வெட்டி விவாதங்கள் பார்த்து காலத்தை பாழ் அடிப்பது.
இவர்களிடையே மாற்றம் ஏற்படும் வரை இங்கே எந்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை! இந்த கேடு கெட்ட நிலையில்தான் ஒவ்வொரு நொடியையும் கனத்த மனதுடன் கழிக்க வேண்டியிருக்கிறது. இது தான் இன்றைய எதார்த்த நிலை. இது அனைவருக்கும் தெரியும் இருப்பினும் தெரியாதவர் போல் அனைவரும் நடிக்கின்றோம்.
#அரசியல்அவலநிலை
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-07-2017
No comments:
Post a Comment