Sunday, July 23, 2017

அமைப்பே (System) புரையோடிவிட்டது.

யோக்கியத்தை தன்னுள் அடக்கி அட்டகாசம் செய்கிறது அயோக்கியத் தனம். அரசியல் என்பது அனைவருக்கும் பொதுவானது. உரிமையுள்ளதும் கூட. ஊழலற்ற ஒரு வெளிப்படைத் தன்மைதான் இப்போது அனைவரும் விரும்புவது.ஆனால், பொது வாழ்வில் தகுதியே தடை என்ற நிலையில் இருக்கும் போது வியாபார அரசியலில் எங்கே போய் தேடுவது ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான பொது வாழ்வோ அரசியலோ…
தகுதியற்ற, தரமற்ற கிரிமினல்கள் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அமைச்சர்கள் ஆகிவிட்டால் என் செய்வது. மொத்தத்தில் அமைப்பே (System) புரையோடிவிட்டது.

#பொது_வாழ்வு
#தகுதியே_தடை
#அமைப்பு
#system
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-07-2017

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...