திட்டமிட்டவாறு மறைந்த
விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் சிலையை திருநெல்வேலி செல்லும்
நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
இப்பிரச்சனையில் சிக்கல் உள்ளதால் சற்று தாமதமும் ஆகின்றது.
- உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலையில் சிலை வைக்க முடியாதென்று அரசுத் தரப்பில் சொல்கின்றனர்.
- சிலை வைப்பது மட்டுமின்றி பராமரிப்புக்குத் தனியாக அரசிற்கு ரூபாய் 15 லட்சம் செலுத்த வேண்டும்.
- வைத்த சிலையை தேவைப்பட்டால் அகற்றவும் அரசுக்கு உரிமை உண்டு என்று உத்தரவாதமும் தரவேண்டும்.
- இதற்கான செலவையும் சிலை அமைப்புக் குழுவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- உறுதியாக தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி தரமுடியாது என்றும் அரசுத் தரப்பில் கூறுகின்றனர். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடுத்தாக வேண்டிய நிலை.
இப்படியான நிலையில் இந்த
பணியில் தொய்வின்றி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஏப்ரல் மாதம் 18ந்
தேதி இதற்கான அறிவிப்பையும் செய்திருந்தோம்.
இந்த நிலையிலும் மறைந்த நாராயணசாமி
நாயுடுவின் சிலையை நிறுவ உரிய பணிகள் நடந்து கொண்டு தான் வருகிறது.
#சி_நாராயணசாமி_நாயுடு
#விவசாய_சங்கம்
#c_narayanasamy_naidu
#farmers_association
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-07-2017
No comments:
Post a Comment