தெற்குச்
சீமை திருநெல்வேலியில் மகாராஜா பிள்ளை என்று சொன்னால் அறியாதவர்கள் யாரும் கிடையாது.
முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் பிறந்து பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில்
இண்டர்மீடியட் படித்தார். இது 1935 காலகட்டம். பாளையங்கோட்டை
புதுப்பேட்டையில் இருந்து கல்லூரிக்கு செல்லும் போது இன்றைய வ.உ.சி மைதானத்தை கடந்து
செல்லும் போது வேதனையுடன் செல்வார். அப்போது அந்த மைதானம் கர்சன் பிரபு பெயரில் இருந்தது.
ஆங்கிலேயன் பெயரில் இருக்கிறதே என்ற மனத்தாங்கல் மகராஜா பிள்ளைக்கு அப்போது ஏற்பட்டது.
கல்லூரி காலங்களில் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில்
ஈடுபட்டார். நாடு விடுதலை பெற்றபின் 1951ல் பாளையங்கோட்டை நகர கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு
நகர் மன்ற தலைவரானார். இவருடைய நீண்டகால கனவான கர்சன் மைதானம் என்ற பெயரை வ.உ.சி மைதானம்
என்று நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி பெயரை மாற்றினார். இது தான் பாளையங்கோட்டையின்
அடையாளமாக இருக்கும் வ.உ.சி மைதானத்தின் வரலாறு.
நகர்மன்றத்
தலைவராக இருந்தபோது பாளையங்கோட்டை ஹகிரவுண்ட் அரசு மருத்துவமனை பிற்காலத்தில் திருநெல்வேலி
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆனது. அதன் தென்பகுதியில் உள்ள திருநெல்வேலியின்
புறநகராக மாற்றினார். அவரது உருவாக்கத்தால் அமைந்த நகர் தான் மக்களால் பிற்காலத்தில்
‘மகாராஜா நகர்’ என்று அழைக்கப்பட்டது. பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனி
இவர் காலத்தில் தான் உருவானது. இவர் மறைந்து சரியாக 47 ஆண்டுகள் ஓடிவிட்டது.
#திருநெல்வேலி
#மகாராஜா_பிள்ளை
#Tirunelveli
#Maharaja_pillai
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-07-2017
No comments:
Post a Comment