Friday, July 7, 2017

விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை

கடனை வசூல் செய்ய விவசாயிகளிடம் ஜப்தி செய்ய கூடாது  வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளார் நீதிபதி தீபக் மிஸ்ரா. விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கும் , 1975ல் விவசாயிகள் மீது எடுக்கப்பட்ட ஜப்தி நடவடிக்கையை ரத்து செய்யும் உத்தரவை பெற்றவன் என்ற முறையிலும் இந்த தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. 

 தமிழகத்தில் விவசாயிகள் வாங்கி கடனை பெறுவதற்காக ஜப்தி நடவடிக்கை எடுக்க கூடாது என, வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இது குறித்த வெளியான செய்தி : 

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து போனது. இதனால் விவசாயிகள், தண்ணீர் இல்லாமல் தங்களது விவசாய தொழில் செய்ய முடியாமல் பெரிதும் பாதித்தனர். இதைதொடர்ந்து வங்கிகளில் பெற்ற விவசாய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் போனது. இதையொட்டி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில், விவசாயிகளின் கடன்களை திரும்ப கேட்கும் வங்கிகள், அவர்களது உடமைகளை ஜப்தி செய்வதாகவும், அதனை தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில், விவசாயிகள் சங்கம் சார்பில் மனு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகளிடம் கடனை கேட்டு எவ்வித தொல்லையும் தரக்கூடாது. அவர்களிடம் எவ்வித ஜப்தி நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றார்.

மேலும், கடனை வசூலிக்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும். விவசாயிகள் நலன் சார்ந்த விஷயத்தில், வங்கிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் வறட்சி இல்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்...

#விவசாயிகள்மீதுஜப்திநடவடிக்கை 
#தீபக்மிஸ்ரா
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-07-2017

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...