Thursday, July 6, 2017

அரசு வழக்கறிஞர்

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

ஆட்சியின் அலங்கோல போக்கு.  

சட்டப்படிப்பு படித்து விட்டு ரவுடி தொழில் செய்து வந்த ஒருவரை ரவுடிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தார். பின்னர் அதிமுகவின் ஆட்சிகாலத்தில் அவர் ரவுடிப் பட்டியலில் இருந்து பெயரை நீக்கினார்கள். இறுதியாக அவர் 
  தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக செய்தி அறிந்தேன். 

வி.கே.திருவேங்கடாச்சாரி, அரசு வழக்கறிஞரை(Advocate General)
பெருந்தலைவர் முதல்வர் காமராசர் சந்திக்க விரும்பினார். இலாகா அதிகாரிகள் மூலம் செய்தி அனுப்பினார். அதற்கு வி.கே.திருவேங்கடம் ," அரசு வழக்கறிஞரை முதல்வர் தான் அலுவலகம் வந்து பார்க்க வேண்டும், முதல்வரை அரசு வழக்கறிஞர் சென்று பார்ப்பது மரபு அல்ல என்றாராம். 

இதே நடைமுறை தான் பிரிட்டனிலும் உள்ளது. பிரதமரே ஆனாலும் கூட அரசு வழக்கறிஞரை அவரது அலுவலகம் சென்று பார்க்கின்றார். அரசு வழக்கறிஞர்களுக்கு இப்படிப்பட்ட சிறப்பு இருக்கும் இவ்வுலகில் இந்த ஆட்சியில் எல்லாம் தலைகீழாகவே நடக்கின்றது.
#governmentadvocate
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-07-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...