பொதிகை மலை என்பது மேற்குத் தொடா்ச்சி மலைகளில்
தென்பகுதியில் ஆனை மலைத் தொடரில் அமைந்துள்ளது. இதற்கு அகத்தியர் மலை என்று மற்றொரு பெயரும் உண்டு. பொதிகை மலையின் ஒரு பகுதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் சுமார் 1,866 மீட்டா்கள் ஆகும். இந்த மலையிலிருந்து தான்
தமிழ்நாட்டில் மட்டுமே பாயும் முக்கிய நதியான
தாமிரபரணி ஆறு உருவாகிறது. சங்க காலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகை மலை என்றும் கூறுவர். சங்ககாலத்தில் வையை என அழைக்கப்பட்ட ஆற்றை
இக்காலத்தில் வைகை எனவும் அழைப்பது போன்றது இது. வடக்கில் இமயமலையும், தெற்கில்
பொதியமலையும் தமிழர் சென்றுவந்து கண்ட ஓங்கி உயர்ந்த மலைகள்.
அகத்தியர் வாழ்ந்த, தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை
என்றும் அழைக்கின்றனர். தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கு எல்லாம் தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி
வருகின்றனர்.
அகத்தியர் வாழும் இப்பொதிகை மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள
அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் சாகசப் பயணம் என்றும்
கூறலாம்.
அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும்அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும்
இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், புல்வெளிகள்
ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை.
இந்த அடர்ந்த
காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு
மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ்
உயிரினங்களும் உள்ளன. கயிற்றின்
துணையுடன் சில பகுதிகளில் பயணிக்க வேண்டும்.
#அகத்தியர்_மலை
#பொதிகை_மலை
#Agastiar_Hills
#Pothigai_Hills
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01-07-2017
சார் நீங்க எப்படி போனீங்க?கொஞ்சம் சொல்ல முடியுமா?
ReplyDelete