இந்திய வரலாற்றில் நாடாளுமன்றம் நான்கு முறை நள்ளிரவில் கூடியுள்ளது.
14/15 ஆகஸ்ட் 1947- நாடு சுதந்திரம் அடைந்ததை முன்னிட்டு நடைபெற்றது.
ஆகஸ்ட் 14-15/1972 - நாடு சுந்தரம் அடைந்து வெள்ளிவிழா கொண்டாடியதை முன்னிட்டு கூட்டப்பட்டது.
ஆகஸ்ட் 14-15/1997- சுதந்திரம் பெற்று 50ஆண்டுகள். பொன்விழா கொண்டாடியதை முன்னிட்டு சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது.
ஜூன்30- 2017 - ஜி.எஸ் டி
(Goods service tax) அமல்படுத்தப்பட சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது.
முதல் மூன்று முறை கூடியது வெள்ளைக்காரர்கள் சம்மந்தப்பட்ட விடுதலை விழா கொண்டாட்டம். நான்காவது முறை கூடியது கொள்ளைக்காரர்கள் திணிக்கும் சாமான்யர்கள் திண்டாட்ட விழா.
1997ஆகஸ்ட் 14-15/1997-ல் ராம்விலாஸ் பஸ்வான் அழைப்பின் பெயரில் நானும் கலந்துக் கொண்டேன். அன்று என்னுடன் கலந்துக் கொண்ட சிலர் எல்லாம் கடந்த ஜி.எஸ்.டி சிறப்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மாநிலங்களவை உறுப்பினர்களாகவும் விழாவில் பங்கேற்று இருந்தனர். ஜி.எஸ்.டி என்றால் என்ன கேள்விக்கு விளக்கம் கூட சொல்லத் தெரியாத , சொல்லப்போனால் ஜி.எஸ்.டி என்ற எழுத்துக்களுக்கு இடையே விரிவாக்கம் சொல்லத் தெரியாதவர்கள் கூட உறுப்பினர்களாக நாடாளுமன்ற அவைகளின் இருக்கையை நிரப்பிவிட்டனர். ' தகுதியே தடை' என்ற காலக்கட்டத்தில் தகுதி இல்லாத இவர்கள் எப்படி ஜி.எஸ்.டி மசோதாவை எதிப்பார்கள்? இவர்களுக்கு ஜி.எஸ்.டி பற்றிய அறிவே இல்லை. இவர்களை அனுப்பி வைத்துவிட்டு என்ன செய்கின்றார்கள் என அங்காலாய்ப்பது எப்படி அறிவுடைய செயலாகும்.
இந்திய அரசியல் சட்டத்தின் படி, ஜனநாயக அரசியல் யார் வேண்டுமானாலும் அப்பொறுப்புக்கு வரலாம் என அனுமதிப்பதை வரவேற்கின்றேன். ஆனால் யாரை அனுப்ப வேண்டும் என்ற சிந்தனை இல்லாத மக்களை பார்த்து நொந்துக் கொள்கின்றேன். மக்கள் சிந்தனையில் மாற்றம் வேண்டும். நாற்றம் பிடித்த அரசியலில் சீர்திருத்தம் வேண்டும். அதற்கு மக்கள் சிந்திக்க தொடங்க வேண்டும். இதனை அரசியல் கட்சிகளே பொறுப்பேற்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.
#ஜிஎஸ்டிசிறப்புக்கூட்டம்
#நாடாளுமன்றத்தில்நான்காவதுசிறப்புக்கூட்டம்
#அரசியல்சீர்திருத்தம்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-07-2017
No comments:
Post a Comment