Tuesday, December 8, 2020


எதைப்பற்றியாவது எப்பொழுதும் எண்ணிக்கொண்டேயிருக்கும் மனதானது அது வெளிப்படுத்தும் உணர்வுகளையும் செயல்களையும் பல்வேறு விதமாக மாற்றிக்கொண்டே இருக்கும்.


அந்த மனது ஓயாமல் எதையாவது தன்னுள் நிரப்பிக்கொண்டே இருக்கும் – உணர்ச்சிகளை எப்போதுமே அதிகரிக்கச் செய்வது, வந்து வந்து போகும் ஆர்வங்கள்.

எந்த அளவிற்கு வெளியுலகை நோக்குபவராக இருக்கிறோமோ, அந்த அளவிற்கு மன எழுச்சியும் அதனால் நம்மை பார்ப்பதற்கான தடையை நாமே உருவாக்கவும் செய்கிறோம். நவீன உலகு, இவ்வாறான மேம்போக்கான செயல்பாடுகளையும் தடைகளையுமே ஊக்குவிக்கிறது. பெரும்பாலோர் அமைதியாக இருப்பதற்கு அஞ்சுகிறார்கள்.

No comments:

Post a Comment

@KSRadhakrish · Oct 17