திறமை என்பது ஒருவருக்கு பிறவிலேயே கிடைத்த தனித்திறமை, மனோ சக்தி, உடல் சக்தி, ஒரு குறிப்பிட்ட துறையில் இயற்கையாகவே கிடைத்த அசாதாரண நுட்ப-அறிவு ஆகிய எதுவாகவும் இருக்கலாம்.அதாவதுநிபுணத்துவம்.சிலருக்கு திறமை முயற்ச்சியில் வரும்
நிபுணத்துவம் என்பது முழுமை அல்ல. அது சிறு பகுதியில் முழுமையாக இருக்கலாம். ஆனால், உன் பிரபஞ்ச இருப்பு முழுமையானதா?
நீங்கள் பணக்காரராக இருக்கலாம், எல்லாவிதமானவசதிகளைபெற்றி
ருக்கலாம்.
நீங்கள் நிபுணராக இருக்கலாம்,
நீங்கள் மாபெரும் ஒரு விஞ்ஞானியாக,
நீங்கள் பெரும் தொழில் அதிபராக இருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கையின் இறுதியில், இவையெல்லாம் உங்கள் இருப்பை வீணடித்துவிடுமோ?
நீங்கள் அதிகாரத்தில், உச்ச பதவியில் இருக்கலாம். இறுதியில் இவை என்ன?
இது நிரந்தரமான இருப்பாஉங்களுக்கு?
இது நீங்கள் உங்களிடம் கேட்கவேண்டிய ஒரு கேள்வி. வேறொருவர் இக்கேள்விக்கு பதிலளிக்க முடியாது, உங்களைத் தவிர.இதில் உங்களின் பதில் சரி என்றால் நீங்கள்
வாழும் வாழ்க்கை சரியானது, அர்த்தமானது.
#ksrpost
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-05-2020
No comments:
Post a Comment