Tuesday, July 18, 2017

மனதை வருடும் நிகழ்வுகள்..

மனதை வருடும் நிகழ்வுகள்.. 

சமீபத்தில் இரு நிகழ்வுகள் என்னை மனதளவில் பாதித்தது. 
ஒன்று , இரா.செழியன் மரணம். காலை 8மணிக்கு உயிரிழந்தார். உயிரிழந்த தகவல் தெரியவரும் வேளையில் மாலை 5மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது. சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தும் வண்ணம் ஏற்பாடுகளை செய்யவில்லை. மிகவும் வருந்தினேன். 

மற்றொன்று,  சென்னை மாகனத்தின் பெயரை தமிழ் நாடு என மாற்றம் செய்யப்பட்ட ( ஜூலை18-1967) ஐம்பதாவது ஆண்டினை பெரியளவில் கொண்டாட எந்த அக்கறையும் காட்டப்படவில்லை என்பது. மனதை பாதித்த விசயம்.



தமிழக எல்லைகள் வரையறுப்பட்ட ஐம்பதாவது ஆண்டை கூட    முதலில்   'தமிழகம் 50' என அடியேன் தான் நவம்பர் 11-2006 ஆம் ஆண்டு மயிலை பாரதி வித்யா பவனில் விழா எடுத்தேன். 

#தமிழ்நாடு50ஆம்ஆண்டு.
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ் இராதாகிருஷ்ணன் 
18-07-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...