Thursday, July 6, 2017

கோவையில் அர்த்தமற்ற சாலை பெயர்ப்பலகை

கோவையில் அர்த்தமற்ற சாலை பெயர்ப்பலகை.
-------------------------------------
நேற்று காலை கோவையில்  நடைபயற்சி மேற்கொண்ட போது படத்தில் உள்ள பெயர்பலகையை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில்  பார்த்தேன்.  பார்த்த உடன் அவ்வழியே சென்ற சிலரையும், இந்த பலகையில் உள்ள பெயர் யாருடையது,  எனகேட்டேன்.  யாருக்கும்
தெரியவில்லை.மாநகராட்சி நிர்வாகம் வி.கே.கே மேனன் அவர்களை கெளரவிக்கும் பொருட்டு  அந்த தெருவிற்கு அவருடைய  வைத்ததில் அர்த்தமில்லையே, எதோஒருமூலையில். சிறுகுறிப்புவைத்திருக்கலாமே? 

வி . கே.கிருஷ்ண மேனன் என்பது முழுப்பெயர். இவர் கேரளாவில் , கோழிக்கோட்டில் பிறந்து , பம்பாய் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானவர். நேருவின் நெருங்கிய நண்பர், சிறந்த பேச்சாளர், பத்திரிகையாளர்.  காஷ்மீர்-இந்தியா எல்லைப் பிரச்சனைகள் குறித்து ஐ.நா மன்றத்தில் உரையாற்றி புகழ் பெற்றவர்.   கோவைக்கும் மேனனுக்கும் தொடர்பு உண்டு 

1962ல் இந்தியா-சீனா போர் நடந்த போது இந்தியாவின் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்தவர். பின்னர் சீனப்போரில் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். இந்தியாவின் ஆற்றல் மிகுந்த மனிதர்கள்  பட்டியலில் இடம் பிடித்தவர். 

( மாவட்டங்கள், ஊரின் பெயர்கள், தெரு பெயர்களில் இருந்து சாதியை நீக்கிய  அரசாங்கம் இவரின் பெயரில் சுமந்து நிற்கும் மேனன் என்பதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகின்றதோ?)



#விகேகேமேனன்
#krishnamenon
#vkkMenonRoad #kovai 
#KSRadhakrishnanpostings 
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-07-2017

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...