இந்த எளிய வார்த்தைகள் எனது இதயத்திலிருந்து…
மராத்தி: நரேந்திர எல். காட்கே
"சுயநல மனிதர்கள்
வார்த்தைகளுடன் கவர்ச்சியாக இருக்கிறார்கள்.
மிருதுவான நாவின் பேச்சு
மறைந்திருக்கும் கத்தி
எனவே நான் சாதாரணமான
வெகுளித்தனமான வார்த்தைகளை நம்புகிறேன்
எங்களின் உண்மையான உணர்வுகள்
அடிப்படையற்ற மரபுகள்
தடை செய்கின்றன.
இலக்கற்ற ஓட்டத்தில் இன்றோ நாளையோ,
ஒவ்வொருவரும் பரபரப்பாகவே இருக்கிறார்கள்
வருத்தங்களையும் ரணங்களையும் எப்போதும் காட்டுவதில்லை.
என் இதய வார்த்தைகள்
கறுப்பு மேகங்களைப் போல பரவட்டும்.
வெட்ட வெளியில்
விவசாயம் செய்யப்படாத நிலத்தில் நான்
நீர் ஊற்றுகிறேன்; நம்பிக்கையை அறுவடை செய்ய."
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-07-2017

No comments:
Post a Comment