Monday, October 2, 2023

மகாபாரதம்…துரியோதனன் உயிரைப் பிரிய விடாமல் , இருந்த மூன்று கேள்விகள்:

துரியோதனன் உயிரைப் பிரிய விடாமல் , இருந்த மூன்று கேள்விகள்:

1. போர் நடந்த சமயத்தில் நான் அஸ்தினாபுரத்தை சுற்றி ஒரு கோட்டையை எழுப்பியிருந்தால் என்ன செய்திருப்பாய்?

2. துரோணாச்சாரியார் மறைவுக்குப் பின் அசுவத்தாமனை சேனாதிபதி ஆக்கியிருந்தால் என்ன செய்திருப்பாய்?

3. விதுரனை போர் புரிய வைத்திருந்தால் என்ன செய்திருப்பாய்?

பதில்கள்:

கிருஷ்ணர் துரியோதனனின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஒரு வேளை நீ அஸ்தினாபுரத்தைச் சுற்றி கோட்டை எழுப்ப முயன்றிருந்தால், நான் நகுலனை அனுப்பி அந்தக் கோட்டையைத் தகர்த்திருப்பேன்.

நகுலன் அளவிற்கு குதிரை ஓட்ட எவராலும் முடியாது.மழை பெய்யும் போது ஒரு துளி விழுந்து அடுத்தத் துளி விழுவதற்குள் நனையாமல் நகரும் அளவிற்கு வேகமாய் குதிரை ஓட்டும் திறன் படைத்தவன் நகுலன்.

ஒரு வேளை அசுவத்தாமன் சேனாதிபதி யாக நியமிக்கப்பட்டிருந்தால் நான் தர்மரை கோபப்பட வைத்திருப்பேன்.

ஏனெனில், தர்மரின் கோபம் எதிரில் நிற்கும் எவ்வளவு பெரிய மாவீரனையும் எரித்து சாம்பலாக்கிவிடும்.

ஒரு வேளை விதுரர் போர் புரிய தொடங்கி இருந்தால், நான் ஆயுதம் ஏந்தி போர் புரிய தொடங்கி இருப்பேன். 

#மகாபாரதம்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
2-10-2023

No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...