Thursday, July 16, 2026

"தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்கும் மாபெரும் இணைப்பு விழா".

 "தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்கும் மாபெரும் இணைப்பு விழா".

இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் மாநில தலைவர் திரு. செந்தில்குமார் அவர்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் அனைவரும் தங்களை பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் நலச் செயல்பாடுகள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. அவர்களின் தொலைநோக்கு சிந்தனை, நல்லாட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தால் ஈர்க்கப்பட்டு, அனைவரும் தங்களை நம் தமிழக பாரத ஜனதா கட்சியுடன் இணைக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த மாபெரும் இணைப்பு விழாவை நினைவுபடுத்தும் விதமாக புதிதாக எழுப்பப்பட்ட கொடிக்கம்பத்தில் நம் பாரதிய ஜனதா கட்சியின் கொடி ஏற்றி வெற்றிகரமாக இந்த நிகழ்வு தொடங்கப்பட்டு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் உடன் தேசிய செயலாளர் மற்றும் தமிழக பாஜக நேரிட பொறுப்பாளர் திரு. அவர்கள், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் திரு. அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் திரு. தாமரை ஜெகதீசன், விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் திரு. ராஜேஷ் கண்ணா அவர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கமத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...