தமிழ் நாடு நீர்வளத்துறை #திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவிற்குட்பட்ட விக்கிரமசிங்கபுரத்துக்கு அருகில் #மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதியிலிருந்து வரும் #கோரையாற்றின் குறுக்கே 43மீ உயரம் கொண்ட அணையைக் கட்ட திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு (Environmental Impact Assesment – EIA) மேற்கொள்வது அவசியமாகும். EIA செய்வதற்கான ஆய்வு எல்லைகளை (Terms of Reference) வழங்குமாறு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் (Expert Appraisal Committee) கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் நாடு நீர்வளத்துறை விண்ணப்பித்திருந்தது. இவ்விண்ணப்பத்தைக் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி பரிசீலித்த நிபுணர் குழு அணையைக் #களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக எல்லைக்கு வெளியே அமைக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராயுமாறு தெரிவித்துள்ளது.
#koraiyardam #westernghats #t irunelveli
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment