ஒரு நூல் வாசித்து முடித்து அடுத்த நூலை வாசிக்கத் தேர்வு செய்வது அரும்பணி. கைவசம் இருக்கும் நூல்களுக்குடையில் மனம் அலைபாயும். எப்படியோ ஒருநிலைப்படுத்தி 800 பக்க மொழிபெயர்ப்பு நாவலொன்றை தேர்வு செய்தேன். அழகான மொழிபெயர்ப்பு, பிரமாதமான கதை. நூறாவது பக்கம் கடக்கையில் அந்த அறிவிப்பு கண்ணில் பட்டது. சமகால எழுத்தாளர் ஒருவரின் புதிய நாவல் வெளியான செய்தி. ஏப்ரல் முதல் அந்த நாவலுக்காக காத்திருக்கிறேன். நான்கைந்து முறை அந்த எழுத்தாளரிடமே எப்போது வரும் என்று கேட்டிருக்கிறேன். செய்தி கண்ணில் பட்டவுடனே order உம் செய்தேன். இன்று கையில் கிடைத்தது. பெரு நாவலின் இருநூற்றி ஐம்பதாவது பக்கத்தைக் கடந்திருந்தேன். கொஞ்சமும் யோசிக்காமல் புதிய புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். வாசிக்கக் காத்திருக்கும் நிறைய புத்தகங்களின் முறைப்புடன் பாதியில் நிற்கும் நூலும் சேர்ந்துகொண்டது. புதிய நூல்களை கையிலெடுப்பதும் எதிர்பார்ப்பதும் ஒரு dopamine hit!
வாழ்வில் கைவிடக்கூடாது என்று எண்ணும் ஒரே உணர்வு புத்தகப் பித்து.
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment