Wednesday, July 15, 2026

தெரிந்து அறியவது அவசியம் அரசியல் களத்தில்…..

 தெரிந்து அறியவது அவசியம் அரசியல் களத்தில்…..

இதெல்லாம் போஸ்ட் காலனியம் பின்னை நவீனத்தில் வருகிறது என்று சொல்கிறார்கள் இதெல்லாம் எத்தனை நாளைக்கு?இன்னொன்று புதிதாக வரும்! அதை யார் பின்பற்றுவது?ஆக அந்தந்தக் காலத்தில் நடந்ததை அந்தந்த காலம் பொறுப்பேற்று வந்திருப்பதைத்தான் நாங்கள் வரலாறு என்கிறோம். இந்தப் பின்னை நவீனத்திற்குப் பிறகும் வேறு புதிய ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது! அது இலக்கியம், அதன்நடைமுறைஅரசியல் எல்லாவற்றிலுமே புதிய அலையை உருவாக்கப் போகிறது! அது வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நாளை உங்கள் முன்பு தோன்றப்போகும் இளம் தலைமுறையினர் அதை மறுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? எதையும் சிந்தித்துச் செயல்படுங்கள்! வரலாற்றில் இருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது!அதில் எது சரியாகவில்லையோ அதைப் புதிதாக முயற்சிப்பது என்கிற முறையில் தான் அறிவும் உணர்ச்சியும் வளர வேண்டும்! வரலாறு எனும் உரைகல்லில் உரசித்தான் நீங்கள் தங்கமா என்பதை நிரூபிக்க முடியும்! அதை மறந்து விடாதீர்கள்! சும்மா தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிட முடியாது! சரி! நீங்கள் வரலாற்றில் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று என்னைக் கேட்டால் சிலரைப் போல் வாழக்கூடாது என்பதைக் கற்றுக் கொண்டேன் அது போதாதா? என்று பல இளைஞர்களுக்கு சொல்வேன். அதுவும் எனக்கு வரலாறு கற்றுக் கொடுத்தது தான்!! #GenZStyle #ksrpost



No comments:

Post a Comment

JULY 13