Wednesday, July 15, 2026

நேற்று முன்தினம் இளம் வழக்கறிஞர் ஒருவர் இந்தியத் தலைமை நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு எதிராக அடாவடித்தனமாக நடந்து கொண்டது செய்திகளாகி ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது.

 நேற்று முன்தினம் இளம் வழக்கறிஞர் ஒருவர் இந்தியத் தலைமை நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு எதிராக அடாவடித்தனமாக நடந்து கொண்டது செய்திகளாகி ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது.

இந்த ஜென் சி என்று சொல்லப்படும் புதிய இளைய தலைமுறைகள் என்னதான் நவீன கல்விகளைக் கற்று வந்தாலும் மரபு சார்ந்த விழுமியங்களை கடைபிடிக்கத் தவறுகிறார்கள்!. எல்லாவற்றிலும் வேகம் உடனே அனைத்தையும் முடிக்க வேண்டும்! நினைத்ததைச் சாதிக்க வேண்டும்! என்கிற பிடிவாதம் சரிதான். ஆனால் அதன் பேரில் மிக அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள. ஆனால் அதைப் பொது இடங்களில், யாரிடம், எந்த முறையில்,வெளிப்படுத்த வேண்டும் என்பது கூட இவர்களுக்குத் தெரியவில்லை! இவர்களுக்கு நடந்நது, மற்றும் வரலாறு என்பது புரியவில்லை!. எங்கள் தலைமுறைக்கு எந்த வரலாறும் வேண்டியதில்லை என்கிற மாதிரி நடந்து கொள்கிறார்கள்!. உண்மையில் இவர்களது நோக்கம் என்ன? இவர்கள் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள்? வெற்றியை இலக்காக வைத்து இந்த இளம் தலைமுறையினர் பயணிக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.? நாங்கள் எல்லாம் வழக்கறிஞர்களாகப் பணி செய்த காலத்தில் நீதிபதியை ஒரு தனி மனிதராகப் பார்த்ததில்லை! அவரை ஒரு நீதிமன்றமாகத்தான் பார்த்தோம். அவர்களை மதித்து வழக்குகளை நடத்தினோம். அந்தக் காலத்தில் குறிப்பாக 70 80களில் லஞ்ச லாவண்யங்கள் என்று நீதிமன்றத்தில் பெரிதாக இருந்ததில்லை. நீதிமன்றங்களின் கட்டுக்கோப்பு, தீர்ப்புகளுக்கு மதிப்பளித்தல், உண்மை வெளிவரும் வரை வாதாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தல், என்பதாக அதன் நடைமுறை வலிமை மிகுந்ததாக இருந்தது!. நீதிபதிகள் ஒரு நாட்டின் அனைத்துப் பொறுப்புகளின் மீது அக்கறை உள்ளவராகவும் இருந்தார்கள்.யார் வஞ்சிக்கப்பட்டாலும் நீதிமன்றத்தில் நமக்கு இறுதி நியாயம் கிடைக்கும் என்று நம்பி வாழ்ந்தார்கள்! இன்றைக்குப் படித்து வரக்கூடிய இளைஞர்கள் அல்லது பொதுவாகவே ஜென்சி என்று சொல்லக்கூடிய இந்த இளைஞர்களுடைய எதிர்பார்ப்புகளும் உடனடியாக சாதித்துக் கொள்ளக் காட்டும் பதற்றங்களும் பொது வாழ்க்கைக்கு ஏற்புடையதாக இல்லை! என்றாலும் பழைய கழிதலும் புதிய புகுதலும் உலக வழக்கம் என்கிற அளவில் எதையும் தாமதப்படுத்தாமல் உடனே அதை முடித்து தர வேண்டும் என்று இந்த இளைஞர்கள் நினைப்பது ஒரு வகையில் சரிதான். அதைப்போல வழக்காடு மன்றங்களும் தங்களுடைய வழக்கமான பாணியில் இருந்து இந்தப் புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். ஆனால் ஒரு வழக்கறிஞர் ஒரு வழக்கெ எடுத்து வைக்கும் முறையும் அதை உணர்த்தும் தெளிவும் நீதிபதிகளுக்கு முன்பாக அதிகபட்ச உண்மை தன்மையும் அவரால் நிரூபிக்கப்படும் போதுதான் அந்த வழக்கின் தீர்ப்புக்கு மரியாதை இருக்கும்!அதை விட்டுவிட்டுத் தனக்குச் சாதகமாக இல்லை என்பதற்காக வழக்குத் தாள்களை கிழிந்து எறிந்து கோர்ட்டை அவமதிப்பது எவ்வகையில் முறையாகும். மரபு சார்ந்த பழைய பழக்கவழக்கங்கள், வழக்குகளை நடத்துவதில் இருக்கும் சம்பிரதாயங்கள், அதற்கான கால அவகாசங்கள் போன்றவற்றை புரிந்து கொள்ள வேண்டும்! எதையும் அவ மதிப்பது நல்லது அல்ல. இன்றைக்கும் பிரிட்டிஷ்காரர்கள் பழைய கலாச்சாரச் சட்ட மதிப்பீடுகளை வைத்துக்கொண்டு நவீனமான இன்றைய புதியவர்களோடும் ஏற்கனவே உண்டாகி இருக்கக்கூடிய மாற்றங்களோடும் கலந்து அலசி ஆராய்ந்து அதை நிறைவேற்றுகிறார்கள். அது போக உலகமெங்கும் தமிழ்நாடு வரைக்கும் கூட ஜென் சி என்கிற மாடலை வைத்துக் கொண்டு எல்லாம் எங்களுக்குத்தான் தெரியும்! நாங்கள் தீர்மானிப்பதுதான் சரி! என்ற நினைப்பில் பழைய விழுமியங்களை விமர்சிப்பது மறுப்பது இதுவரையிலான வழிமுறைகளைப் புறம் தள்ளுவதும் பரிகாசம் செய்வதும் நல்லதல்ல!. இவர்களுக்கு வரலாறு தேவை இல்லை என்றால் பல்கலைக்கழகங்களிலோ பள்ளிகளிலோ வரலாற்றுப் பாடங்கள் ஏன் கற்பிக்கப்படுகிறது? இவர்களதைப் படித்துவிட்டு மதிப்பெண் தேறித் தானே வருகிறார்கள்!. அதேபோல சட்டங்களுக்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு!நீதித்துறை பல வரலாறுகளைச் சந்தித்து இருக்கிறது என்பதையும் எத்தனை வழக்குகளை அவர்கள் கையாண்டு இருக்கிறார்கள் என்பதையும் இவர்கள் ஆழ்ந்து படித்துவிட்டுத் தானே இங்கே வந்து வாதம் செய்கிறார்கள்! அதற்கெல்லாம் வரலாறு தேவைப்படுகிறது தானே!! எப்படிப் பார்த்தாலும் வரலாற்றின் சங்கிலித் தொடர்ச்சிதானே இன்றளவும் தொடர்ந்து வருகிறது அதன் மூலம்தானே விசாரணையும் தீர்ப்பும் வழங்கப்படுகிறது.! இவர்கள் இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் வாசிப்பதில்லை! வரலாற்றையும் வாசிப்பதில்லை! குறிப்பாக இலக்கியத்தில் சமூக வரலாறு எவ்வளவு தூரம் பதியப்பட்டு வருகிறது அவற்றை எல்லாம் இந்தப்புதிய தலைமுறையினர் கற்றுத் தேர்ந்துதான் வருகிறார்களா?. கடந்த காலத்தில் முதலாம் உலகப் போர் நடக்கவில்லையா இரண்டாம் உலகப்போர் நடக்கவில்லையா? அதனால் ஏற்பட்ட மாற்றங்கள்

No comments:

Post a Comment

JULY 13