Wednesday, July 15, 2026

#பாரதி என்ற ஒரு கவிராஜனுக்கு செய்ய அவமானம்! பாவம்!!

 #பாரதி என்ற ஒரு கவிராஜனுக்கு செய்ய அவமானம்! பாவம்!!

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• சிறுவர்கள் விளையாடிய கிரிக்கெட் பந்து பட்டு 1.53 கோடி செலவில் மறு நிர்மாணிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்லம் சேதமடைந்து இருக்கிறது. தூத்துக்குடி எம் பி கனிமொழி அவர்கள் அவருடைய இலக்கியச் சேவையில் மனம் கனிந்து அவரது மேற்பார்வையில் நடந்த இந்த பாரதியார் இல்லச் சீர்திருத்தம் இப்படியான சோகக் கதையில் முடிந்திருக்கிறது. சீர்திருத்தம் செய்த வகையில் சரிதான். ஒரு கிரிக்கெட் பந்துக்குகே சேதாரம் ஆகும் எனில் இத்தனை ரூபாய் செலவு செய்த அந்த அருமைக் காரியம் ஏன் அரைகுறையாய் முடிந்திருக்கிறது. அதன் காண்ட்ராக்டர்கள் இந்தச் செலவைக் காட்டி அடித்த ஒதுக்கீட்டுப் பணம் எவ்வளவு என்பதை முறையாகச் சொல்வார்களா! எத்தனை பேருக்கு இதில் பங்கு இருக்கிறது! மேற்பார்வை பார்த்ததாகச் சொல்லும் கனிமொழி எம்பி அவர்கள் இதற்கு பொறுப்பேற்பாரா? செய்வதைத் திருந்தச் செய்யாமல் வெற்றுப் பெருமை எதற்கு வேண்டி இருக்கிறது. பாரதி வந்து உங்களிடம் அழுதாரா என்ன? மாவிலும் கொள்ளை! பணியாரத்திலும் கொள்ளை! இது ஒரு கவிராஜனுக்கு செய்ய அவமானம்! பாவம்!! #எட்டயபுரம்பாரதியார்இல்லம் #ettiyapurambharathihouse #ksrpost




No comments:

Post a Comment

JULY 13