எல்லாம் வரலாறு தானே! அந்த விளைவுகளால் ஏற்பட்ட மாற்றங்களில் இருந்து தானே நாம் இன்றைக்கு பல்வேறு அறிவுகளைப் பெற்று இருக்கிறோம்! அவையெல்லாம் தேவையில்லை என்றால் லீக் ஆஃப் நேசன் இல்லை, ரூஸ்வெல்ட் இல்லை,புரூபன் இல்லை,காந்தி இல்லை, ஆபிரகாம் லிங்கன் இல்லை, வின்ஸ்டன் சர்ச்சிலும்இல்லை,!! இவர்களெல்லாம் தேவையில்லை என்று வரலாற்றில் முற்றிலும் ஒதுக்கி விட முடியுமா?
காலத்துக்கேற்ற மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மேலே கண்டதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தலைமுறையினர் எதையும் எடுத்தெறிந்து பேசுவதும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வதும் சரியானது அல்ல. அந்த வகையில் நேற்று முன்தினம் தலைமை நீதிபதி அவர்கள் முன்பு இளம் வழக்கறிஞர் நடந்து கொண்டது முறையற்றது. இப்படித்தான் 2000-க்கு பிறகு பிறந்த இந்த இளம் தலைமுறையினர் எல்லா தளங்களிலும் களங்களிலும் நடந்து கொள்கிறார்கள். இதெல்லாம் நன்மைக்கா? தீமைக்கா? என்று காலம்தான் பதில் சொல்லும். இன்றளவும் கடந்த காலத்தில் அறிந்து கொண்ட பல வரலாற்று உண்மைகள்தான் நாம் சூழ்நிலைகளில் சோர்ந்து அயர்ந்து கஷ்டப்படும் காலத்திலும் உதவி செய்வதற்கு ஏதுவாக இருக்கிறது!. தாய் தந்தையர் பாட்டனார் பாட்டி இல்லை என்றால் இந்த புதிய வம்சாவளி வளர்ந்திருக்குமா? அவர்கள் இல்லாவிட்டால் அவர்கள் வழி நடத்தாமல் இருந்தால் இந்த ஜென் சி ஜெனரேஷன் ஒருபோதும் வந்திருக்க முடியாது! முன்னோடிகளை நினைவு கூர வேண்டியது இல்லை என்று நீங்கள் சொல்வதற்குச் சமமானது தான் வரலாறு வேண்டாம் என்று சொல்வதும்! வரலாறு என்பது நமது தாய் தந்தையர் மட்டுமில்லாமல் நம்முடைய மூதாதையர்களுடைய வழித்தோன்றலில் உறைந்திருக்கும் ஜீன்களின் செய்திகள்தான்! நீங்கள் வேண்டாம் என்றாலும் உங்களது ஜீன்களில் பழைய மரபுகள் தொடர்ந்து வருகின்றன. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இன்றைக்கு எதையும் பேசவோ செய்யவோ முடியாது! அப்படி நடந்தால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதையும் வரலாற்றில் இருந்துதான் நீங்கள் படித்துத் தெரிந்து கொள்ள முடியும்! சூழ்நிலைகள் நெருங்கி வரும்போது அதிலிருந்து தற்காத்துக் கொள்ள அனுபவங்கள் தான் கை கொடுக்கிறது. பன்னாட்டுப் பிரச்சினையாக இருந்தாலும்,உள்நாட்டுப் பிரச்சினையாக இருந்தாலும், குடும்பப் பிரச்சினையாக இருந்தாலும் வழி வழியாக வரக்கூடிய அதன் விழுமியங்களும் நடத்தைகளும்தான் நம்மை எப்போதும் பாதுகாக்கின்றன.! மல்லாந்து படுத்துக்கொண்டு நம்மேலேயே எச்சிலைத் துப்ப கூடாது!. இன்றைய நடைமுறை அரசியலையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!அப்படி ஒரு அரசியல் பார்வையோடுதானே நீங்கள் ஜென் சி என்று பெயரிட்டு உங்களை அழைத்துக் கொள்கிறீர்கள். இப்படியான காரியங்களை வரலாறு இன்றி நாங்களே செய்து கொள்ள முடியும் என்று சொல்லுகிற போது ஏற்படக்கூடிய அவசரங்கள் ஆர்வக்கோளாறுகள், குற்றங்கள், இவற்றுக்கெல்லாம் யார் பதில் சொல்வது! ஏராளமான இளைஞர்கள் மோட்டார்வாகன விபத்தில் சிக்கி இறந்து போகிறார்கள்! அங்கே தான் நிதானமும் பக்குவம் வேண்டும் என்றும் அவ்வளவு வேகமாக சாதித்து நீங்கள் எதைக் காணப் போகிறீர்கள் என்கிற கேள்வி எழுகிறது!. உங்களுடைய அலட்சியத்தாலும் உதாசீனத்தாலும் எதிர்காலத்தில் உங்களை நம்பி இருக்கிற சுற்றங்களுக்கு நீங்கள் மன வேதனையைத் தான் அளிக்கிறீர்கள். அத்துடன் இல்லாமல் உங்கள் பெற்றோரிடம் இவருக்கு வாக்களியுங்கள் அவருக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறீர்களே! . வரலாறே வேண்டாம் என்று சொல்கிற உங்களுக்கு இந்த வரலாற்று அறிவு எப்படி ஏற்படுகிறது! அந்த வரலாற்றில் தான் உலக முதல் உள்ளூர் வரை அரசியல் பிறக்கிறது என்பதை அறியாமல் இருக்கிறீர்கள்! எங்களுக்கு வரலாறு வேண்டியதில்லை,விஞ்ஞானமே போதும் என்கிறீர்களே! அப்பொழுது பழைய விஞ்ஞானத்தைத் தூக்கி எறியப் போகிறீர்களா? தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த பல்பை நியூட்டன் லாவை அலெக்சாண்டர் பிளம்மிங் இன் தடுப்பூசிகளை டார்வின் தியரியை எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட முடியுமா? பழைய விஞ்ஞானத்தின் நீட்சி தானே இன்றைய புதிய அறிவியல்! இதெல்லாம் போஸ்ட் காலனியம் பின்னை நவீனத்தில் வருகிறது என்று சொல்கிறார்கள் இதெல்லாம் எத்தனை நாளைக்கு?இன்னொன்று புதிதாக வரும்! அதை யார் பின்பற்றுவது?ஆக அந்தந்தக் காலத்தில் நடந்ததை அந்தந்த காலம் பொறுப்பேற்று வந்திருப்பதைத்தான் நாங்கள் வரலாறு என்கிறோம். இந்தப் பின்னை நவீனத்திற்குப் பிறகும் வேறு புதிய ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது! அது இலக்கியம், அதன்நடைமுறைஅரசியல் எல்லாவற்றிலுமே புதிய அலையை உருவாக்கப் போகிறது! அது வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நாளை உங்கள் முன்பு தோன்றப்போகும் இளம் தலைமுறையினர் அதை மறுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? எதையும் சிந்தித்துச் செயல்படுங்கள்! வரலாற்றில் இருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ள
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment