Thursday, July 16, 2026

திமுக இந்த அளவு தோல்வி அடைந்ததற்கான காரணங்களாக பழைய திமுக காரன் என்கிற வகையில் சொல்ல வருவது!

 திமுக இந்த அளவு தோல்வி அடைந்ததற்கான காரணங்களாக பழைய திமுக காரன் என்கிற வகையில் சொல்ல வருவது!

ஒன்று வாழ்நாள் முழுக்கத் திமுகவிலிருந்து அடிபட்டு சிறை சென்று கட்சிப்பணி செய்தவர்களை விட்டுவிட்டு அதிமுகவில் இருந்து வந்தவர்களான எ வ வேலு, கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி, சேகர்பாபு,ராஜ கண்ணப்பன்,ரகுபதி, செல்வகணபதி, ஆஸ்டின் etc etc போன்ற இவர்கள்தான் கட்சியை காப்பாற்றுவார்கள் என்று ஸ்டாலின் எடுத்த முடிவு. இரண்டாவது எப்படிக் கலைஞர் ஸ்டாலினை படிப்படியாக உயர்த்தி ஒரு 20 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவரைத் துணை முதல்வர் ஆக்கினாரோ அதுபோல இல்லாமல் உடனடியாக தன் உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் துணை முதல்வர் எனப்பதவிகளைக் கொடுத்து ஐந்து ஆண்டுக்குள்ளேயே அவரை உருவேற்றியதும் ஒரு காரணம்! மூன்றாவது இவர் பெரிதும் நம்பிய இவரது செல்ல மருமகன் நடத்திய பென் நிறுவனங்கள் கொடுத்த தவறான தகவல்கள் அணுகுமுறைகள் போக அவர் ஒதுக்கி வைத்த திமுக காரர்கள் அதாவது ஆதியிலிருந்து திமுகவிற்குப் பாடுபட்டவர்களின் கோபம் சாபமும் கூடத்தான்!மட்டுமில்லாமல் ஒன்றியங்கள் மாவட்டத் தலைவர்கள் யார் ஒருவரும் கட்சிக்காரர்களுக்கு அவர்களின் குடும்பத்திற்கு எந்தச் சிறு உதவியைக் கூடச் செய்யாமல் புரோட்டா கால் என்கிற முறையை ராணுவம் போல் நடத்திக் கொண்டு தங்களின் குடும்ப வளர்ச்சியில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தியது. அதே மருமகன் திமுகவில் சேர்த்து விட்ட அ தி மு க கார்களின் அட்டூழியம்! சொந்தக் கட்சிக்காரர்களை விட்டுவிட்டு மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு தான் எல்லா வேலையும் அவர் தலைமையில் நடந்தன. எளிய திமுகவினர் குடும்பத்தில் மகளுக்கோ மகனுக்கோ வேலையில் ஒரு மாறுதல் வேண்டும் என்று கேட்டு வந்து நின்றாலும் கூட ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட செயலாளர் வழியாக அது நடக்கவில்லை! நான்காவது முதலமைச்சராக இருக்கும்போது ஸ்டாலினுக்கு யாராவது எழுதிக் கொடுத்தால் அதை வைத்துக்கொண்டு பேசுவது! உண்மையில் அதில் என்ன இருக்கிறது! அப்படிச் சொல்வதனால் என்ன விளைவுகள் ஏற்படும்? என்பதைப் பற்றியான சுய அறிவு இல்லாமல் போனது. இப்படி அவருக்கு எழுதி கொடுத்தவர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் எதிர் கட்சியாக இருக்கும் போது கலைஞரையும் திமுகவையும் திட்டியவர்களும் தூற்றியவர்களும் தான். கலைஞரைக் கன்னா பின்னா என்று விமர்சித்தவர்கள் தான் ஸ்டாலினுக்கு எழுதிக் கொடுத்து அவருக்கு ஆலோசனையுமா சொன்னாகள்!. . ஐந்தாவது பாடநூல் நிறுவனம், திட்டக் குழு மற்றும் கலைஞர் டிவியில் நேற்று வரை திமுகவை கடுமையாக விமர்சித்தவர்கள் தான் பதவிகளை வாங்கிக் கொண்டு அங்கே அமர்ந்தார்கள். காலமெல்லாம் திமுகவில் இருந்தவர்கள் அதற்காக கடுமையாக உழைத்து விட்டு இன்றைக்கு பலாயிரம் பேர்கள் பூமிக்கு அடியில் சென்று விட்டார்கள். இப்படியான பாவங்கள் தான் இன்றைக்குத் திமுகவை விரட்டுகிறது.! அண்ணா அறிவாலயம் இப்போது களை இழந்து காணப்படுகிறது. சரியாகச் சொன்னால் பெரியார் திடல் போல அண்ணா அறிவாலயமும் ஆகி விடுமோ என்று தோன்றுகிறது! பாவம் அன்றைய வை. கோபால்சாமி வெளியில் நிற்கிறார் என்று அவரை உள்ளே அழைத்து பாலூட்டி வளர்த்தார்கள். அந்தக் கோபால்சாமிக்கு எதிரானவர்களைத் தூக்கி எறிந்தார்கள்! அதற்கான விளைவுகளைச் சந்திக்கிறார்கள்! எப்படி எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் கூட திமுக பிரதான எதிர்க்கட்சியாக இருந்து கௌரவமாக இருந்தார்களோ அந்த அளவிற்குக் கூட இன்றைக்கு மரியாதை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது! ஏனெனில் அது கலைஞர் காலம்! இது ஸ்டாலின் காலம்! சோழப் பேரரசு ராஜராஜ சோழன் கரிகாலன் என்றெல்லாம் வரலாற்றில் உண்டு! இவர்களைச் சோழ அரசர்களோடு ஒப்பிட்டுச் சொல்லவில்லை! ஆனால் பிற்காலச் சோழர்கள் என்ன ஆனார்கள்! மண்மேடுகள் தான் மிச்சம். அந்த வரலாறு தான் மீண்டும் நடக்கிறது.! பிறகு என்ன சொல்ல!! ( இது நேரில் பார்த்த நிலையில் விமர்சனம்) Tailpiece: ஒரு தினசரியில் வாசகர் கடிதம்….. திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் வரை எம்எல்ஏ எம்பி என்று அனுபவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,திமுக எதிர்கட்சியான உடன் தன்மானத்தையும் சுயமரியாதையும் இழந்து திமுகவுடன் பயணித்ததாக கூறியுள்ளார்! திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்துத் தனிக்கட்சி தொடங்கினார்! ஆனால் தன் வாரிசை அரசியலில் நிலைநிறுத்த திமுகவில் என்றைக்கு அடைக்கலம் ஆனாரோ அன்று அவருடைய சுயரூபம் தெரிந்துவிட்டது! இன்று இவரது கட்சியில் அவரது மகன் துரையைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படி வேறு தலைவர்கள் இல்லை! இப்போது அணி மாறி இருப்பதன் மூலம் எப்படிக் காரியம் சாதிப்பது என்பதிலேயே தன் எஞ்சிய நாட்களைக் கழித்து விடுவார்! ஒரு அரசியல் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்குச் சில தலைவர்கள் எடுத்துக்காட்டாக இருப்பார்கள்!அந்த வகையில்..2

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...