Thursday, July 16, 2026

பிரதமர் மோடி அவர்கள் இந்தோனேசியாவிற்குப் பயணம் செய்துள்ளார்.

 பிரதமர் மோடி அவர்கள் இந்தோனேசியாவிற்குப் பயணம் செய்துள்ளார். அத்துடன் நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து நாடுகளுக்கும் அவரது பயணம் தொடர்ந்தது. இந்தோனேஷியா அதிகம் முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட ஒரு இஸ்லாம் நாடு. அந்த நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடனான சந்திப்பின்போது அந்த அதிபர் சொன்னது “எனக்கு இந்தியாவுடன் ரத்த சம்பந்தம் உள்ளது இந்தியாவைப் பற்றி கேட்டாலோ இந்து வணக்கப் பாடல்களைக் கேட்டாலோ எனக்கு மெய்சிலிர்க்கிறது.” என்று சொல்லி இருக்கிறார்.

நான் இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறேன்! இதுவரை காங்கிரஸ் காலத்தில் போடப்படாத ஒப்பந்தங்களை எல்லாம் இந்தோனேசியாவில் சாதித்து வந்திருக்கிறார். அதேபோல கனிமவளப் பேச்சுவார்த்தைகளில் உலகின் மற்ற நாடுகளை விட அதிக ஒப்பந்தங்களைப் போட்டு வந்தவர் நமது மோடி அவர்கள்தான்! அணு மின் சக்திக்கு அதிகம் யுரோனியம் தேவை! ஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்ய மன்மோகன்சிங் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். நடக்கவில்லை! அதன் பிறகு பிரதமர் மோடி போனார்! அந்த யுரேனிய ஒப்பந்தத்தைச் சாதித்தார்! அதுக்கு முன்பான ஒரு காலத்தில் கஜகஸ்தானுக்கும் சென்றார் அங்கே யுரேனியம் அதிகமாக கிடைத்தபடியால் அந்த ஒப்பந்தத்தையும் சாதித்துக் கொண்டு வந்தார். அதேபோல் நிக்கல் லித்தியம் போன்ற உலோகத்தாதுப் பொருட்களை அர்ஜென்டினா ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தருவித்தார்! ஆஸ்திரேலியா பிரதமர் இவரை {மாஸ்டர்} தலைவர் என்று அழைத்தார். அதேபோல நியூசிலாந்து பிரதமர் இந்தியாவில் முதலீடு செய்வதற்காக நமது பிரதமருடன் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார் இப்படி எந்த நாட்டுக்குப் போனாலும் எதையாவது ஒன்றை சாதித்துக் கொண்டு வருகிறார்! வெளிநாட்டுப் பயணம் செய்ய வேண்டும்! அங்கு நட்புறவுடன் கலந்து உறவாட வேண்டும்! விருந்துகள் உண்ண வேண்டும்!என்கிற அடிப்படையில் அமைவதல்ல தலைவர்களின் பயணம்! அங்கே ஏற்படுத்திக் கொள்ளும் நல் உறவுகளோடு இந்தியாவிற்கு அதனால் என்ன பலன் என்கிற முறையில் தான் அந்த பயணத்தை அமைத்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் மோடி சாதித்ததால்தான் இன்றைக்கு அகில இந்தியத் தலைவராகவும் இருக்கிறார். ஈரான் அமெரிக்கப் போர் குறித்து இந்திய பிரதமர் மோடி என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு இன்றைக்கு உலகளவில் முக்கியமானதாக இருக்கிறது. மட்டுமில்லாமல் மோடி அவர்களின் நடவடிக்கைகள் வெளியுறவுக் கொள்கைகளை உலகமே வியந்து பாராட்டுகிறார்கள்! நேருகாலத்தில் இந்தியாவிற்கு ஐநா உலகப்பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் பதவி கிடைத்தது! நேரு அதை ஏனோவேண்டாம் என்று சொல்லிவிட்டார்! பிறகு அது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இன்றளவில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் படி இந்தியாவைச் தலைசிறந்த நாடாகவும் பல்வேறு பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் தேசிய உள் கட்டமைப்புகளைப் பாதுகாத்துக் கொண்டு வரும் பிரதமர் மோடி அவர்கள் தனது அயராத உழைப்பினாலும் இந்தியாவின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு விரைவில் உலக பாதுகாப்புச் சபையான ஐநாவில் நிரந்தர உறுப்பினர் தகுதியையும் வாங்கித் தருவார் என்கிற நம்பிக்கை என் அளவில் உறுதியாக இருக்கிறது. #ModiGovernment #ForeignPolicy #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட #KSRadhakrishnan



No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...