#Modi’s #ForeignPolicyandvisits
—————————————————- இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பலமுறை வெளிநாடு சென்று வருகிறார்! எப்போது போனார் எப்போது வருகிறார்! என்றே தெரியவில்லை!!அதற்கான தகவல்களும் முறையாகச் சொல்வதும் இல்லை. எதற்காக அங்கு அவர் யாரைப் பார்க்கப் போகிறார். அவருடைய அந்த பயணங்களின் நோக்கம் என்ன என்பதும் யாருக்கும் தெரிய வில்லை! இருந்தாலும் அவரிடம் யாரும் எந்த கேள்வியும் கேட்பதில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது! கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி அவர்கள் கூட பன்னாட்டு உறவுகள் இறக்குமதி ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் ஒப்பந்தங்கள் சார்ந்து 103 முறைதான் வெளிநாட்டுப் பயணம் செய்திருக்கிறார்! ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் 2014 முதல் 2019 டிசம்பர் வரை ராகுல் 247 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். இந்தியக்காங்கிரஸ் காரிய கமிட்டியிலிருந்து கூட இதற்கான அறிவிப்புகள் ஏதுமில்லை.! இவ்வளவு பயணங்கள் எதற்கு என்ற கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது!? இந்தாண்டு பிப்ரவரி 25- 26 இஸ்ரேல் மே 15 -20 ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து ஸ்வீடன் நார்வே இத்தாலி: ஜூன் 13 -18 ஜி 7 நாடுகள் சந்திப்பு,பிரான்ஸ் செக்கோஸ்லாவாகியா,: ஜூன் 27- 29 ஸுசெல்ஸ் தீவு :ஜூலை 6- 11 இந்தோனேசியா ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆக இந்த ஆண்டு மட்டும் ஐந்து மாதங்களில் 12 நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம் செய்திருக்கிறார். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மோடி ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்ற கேள்விகள் எழுந்தன! அவரை (நான் ரெசிடென்ட் இந்தியர்) “நாட்டில் தங்காத இந்தியர்” என்று குறிப்பாக காங்கிரஸும் ஊடகங்களும் நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பரிகாசக்கேள்விகள் கேட்பது வழக்கமாக இருந்தது! ஆனால் அந்தப் பரிகாசங்கள் இன்று நின்று விட்டன. ஏன் நின்று விட்டன என்பதைப் பார்ப்போம்! 1990களில் தொடங்கிய உலகமயமாக்கல் போதையில் இருந்து 2008 முதல் தெளிந்து வந்த உலகக் கட்டமைப்பு இன்றைக்குத் தலைகீழாக மாறிவிட்டது! உலகையே மயக்கிய உலக மயமாக்கல் மீது 2008 உலக நிதி நெருக்கடி கேள்விக்குறி எழுப்ப, அமெரிக்கா மேற்கு ஐரோப்பிய நாடுகள் மள மளவென சரியத் தொடங்கின! இதற்கிடையில் கிடுகிடுவென்று சீனா உயர்ந்த நிலையில் உலக அரசியல் கண்ணுக்கு தெரியாமல் மாறி வந்தது!! 2020ல் உலகை உலுக்கிய கொரோனா, கம்யூனிஸ வீழ்ச்சிக்குப் பிறகு உருவான உலக அரசியல் கட்டமைப்பே மாறிவிடும் என்று அதை உருவாக்கிய ஹென்றி கிஸ்ஸிங்கரே கூறினார்! அது வெளிப்படையாக மாறத் தொடங்கியது! 2023 உக்ரைன் யுத்தம் 2024 அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றி, அதனால் உலக நாடுகளை ஒரு குடையில் கொண்டுவரும் உலகமயமாக்கலின் வீழ்ச்சி,வர்த்தகப் போர்கள், 2026 இல் வளைகுடா நாடுகள் யுத்தம், போன்ற தொடர் நிகழ்வுகள் காரணமாக உலகமே தலைகீழானது! ஐக்கிய நாடுகள் சபை உலக வங்கி உலக வர்த்தக சபை போன்ற அனைத்து நாட்டு அமைப்புகளும் பலவீனமடைந்தன. இரண்டு உலகமகா யுத்தங்களுக்கு முன் இருந்த நட்பு,விரோத, நடுநிலை நாடுகள் என்ற சர்வதேச உறவு முறை திரும்பியது!உலகமயமாக்கல் மற்றும் டபிள்யூ டி ஓ முடங்கியதன் விளைவு என்னவென்று AI ஜெமினியைக் கேட்டபோது!”அதனால் உலகளாவிய ராஜ தந்திரம் மிக முக்கியமாக மாறியது “மட்டுமில்லாமல் செயல் இழந்த HTO ஐ எம் எஃப் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் ராஜதந்திரம் மாற்றாக மாறியுள்ளது!” சிதறிய சூழலில் பொருளாதாரக் கருவிகளை ராஜதந்திர ஆயுதங்களாகப் பயன்படுத்திக் கையை முறுக்கிப் பேச்சு வார்த்தை நடத்தவும் அச்சுறுத்தவும் செய்கிறது அமெரிக்கா!! இந்த அடாவடி போக்கைச் சமாளிக்க நட்பு நாடுகளுடன் வர்த்தகம் பிராந்திய ஒப்பந்தங்கள் என்று பொருளாதார ராஜதந்திரம் அதன் அளவிலேயே பெருகி வருகிறது என்று கூறியது!அது மேலும் வர்த்தகம் என்பது இனிப் பொருளாதாரம் செயல் திறன் மலிவான பொருள்களுக்கான சந்தை மட்டுமல்ல! அது தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கமாகி விட்டது!இன்று முக்கிய வர்த்தகப் பாதைகள் உள்ளிட்ட ஓட்டங்கள் விநியோகச் சங்கிலிகள் தனி நாடுகளின் ராஜ தந்திர நடவடிக்கைகளால் தீர்மானிக்கப்படுகின்றன” என்றும் AI கூறுகிறது. 2014இல் பிரதமர் ஆன மோடியை தீண்டத் தகாதவர் என்று வெறுத்தன அன்று உலக மகா சக்திகளாக இருந்த வல்லரசுகள். முதல் இரண்டு ஆண்டுகளில் அவர்களைத் தன்னை காட்டி ஏற்க வைத்த மோடி உலகமயமாக்கல் மயக்கம் நீங்க நீங்க அவர்களது சர்வாதிகாரமும் மங்கும் என்று கணித்தார்! அவர் கணித்தது போல உலகக் கட்டமைப்பு குலைந்து அவிழ்ந்த நெல்லிக்காய் மூட்டை போலச் சிதறியது உலகம்!! உலகக் கட்டமைப்பு குலைந்ததால் தனிப்பட்ட நாடுகளுடன் நல்லுறவே நிலைக்குமென்று இன்று AI கூறுவதை அன்றே கணித்த மோடி முக்கியமான நாடுகள் தவிர முக்கியத்துவம் இல்லாத நாடுகளுடன் முன்கூட்டியே நல்லுறவை வளர்த்தார்! வல்லரசுகளை எதிர்க்காமல் சாதுரியமிக்க..2
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment