Monday, July 20, 2026

சிறிதும் பெரிதுமான உலகநாடுகள் அனைத்துக்கும் சூறாவளிப் பயணம் செய்து ஒவ்வொரு நாட்டோடும் சிலவற்றுடன் குழுவாகவும் நல்லுறவை வளர்த்தார்!

 சிறிதும் பெரிதுமான உலகநாடுகள் அனைத்துக்கும் சூறாவளிப் பயணம் செய்து ஒவ்வொரு நாட்டோடும் சிலவற்றுடன் குழுவாகவும் நல்லுறவை வளர்த்தார்! அந்த அந்த நாடுகள் உயரிய விருதுகளையும் நமது பிரதமருக்கு வழங்கினார்

அவர் ஆங்காங்கே மக்களிடம் தொடர்பு கொண்டார்! உலகம் முழுவதும் பரவிய இந்தியர்களைத் திரட்டி அதில் 5,6 லட்சம் பேர் சேர அந்த நாட்டு அரசுகள் தலைவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்!! அவரது இந்த முயற்சியின் பின்னணியில் இன்று உலகக் கட்டமைப்பு நொறுங்கிவிழ,தொன்று தொட்ட உறவுமுறைகள் பந்தங்கள் கூட குலைவதால் நாடுகளிடையே விளையும் இடைவெளியை அறிவுலகம் காண வேண்டும்! என்றும் குலையாது என்று உலகமே நினைத்த அமெரிக்க ஐரோப்பிய உறவுகள் கூட இன்று சிக்கலடைந்து சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது! பாரம்பரிய உறவுகள் சிதறியதால் இன்று ஒவ்வொரு நாடும் நட்பு நாடுகள் எங்கே என்று தேடி அலையும் நிலையில் இருக்கின்றன! உதாரணமாக அமெரிக்காவுடன் நட்புப் பேணிய நேச நாடுகளின் மீதே அமெரிக்கா வரி விதித்ததால் அமெரிக்காவை ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு #EU ஆதரிக்காதது ட்ரம்புக்கு ஏமாற்றமானது! இ யு ஏன் அமெரிக்காவை ஆதரிக்கவில்லை! என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க பிரான்ஸ் இத்தாலி இரண்டிடமும் மோடி நெருக்கமான உறவு கொள்ள அவர்கள் EUவை நமக்கு எதிராகச் செயல்பட விடவில்லை என்பதுதான் முக்கியமான மன மாற்றம் ! வர்த்தகப் போர் தொடங்கி அமெரிக்கா நம் கையை முறுக்கிய போது அதற்கு நெருக்கமானவர்கள் நம்முடன் வர்த்த ஒப்பந்தங்கள் செய்தது ட்ரம்புக்கு பெரும் சரிவாகக் கருதப்பட்டது! அதனால்தான் ட்ரம்பும் நம்முடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முன்வந்து நம்மீது விதித்த வரிகளை நீக்கினார்! வளைகுடாவில் போர் சமயத்தில் ஏற்பட்ட எரிசக்தித் தட்டுப்பாட்டை நாம் உலகமே ஆச்சரியப்படும்படியாகத் தவிர்க்க குறிப்பாக எரிசக்தி தரும் நாடுகளுடன் இருந்த ஆழ்ந்த உறவுகள்தான் நமக்கு உதவியது! யுரேனியம் கனிமத்தை வைத்து #அணுசக்திமின்சாரமும் தயாரிக்கலாம்! அணுகுண்டும் தயாரிக்கலாம்! எனவே அணுகுண்டு தயாரிப்பு ஒப்பந்தமான என் பி டி யில் கையெழுத்திடாத நாடுகளுக்கு யுரோனியம் உற்பத்தி செய்யும் நாடுகள் அதைத் தருவதற்கு தடை இருக்கிறது! நாம் என் பி டி யில் கையெழுத்திடாத நாடு! யுரேனியக் கனிம வளம் உள்ள ஆஸ்திரேலியா கனடா போன்ற நாடுகள் என் பி டி ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத நாடுகளுக்கு யுரோனியம் தர மறுத்து வந்தன! நமக்கோ அணு மின்சாரம் தயாரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது! காரணம் அது மாசு தராத மின்சாரம்! உலக மாசுக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நம் நாடு 2031 - 32 க்குள் 32,000 மெக்கா வாட் 2047 ல் ஒரு லட்சம் மெக்கா வாட் அணு மின்சாரம் தயாரிப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம்.! அதற்கு ஆண்டுக்கு பத்தாயிரம் முதல் 12000 டன் வரை யுரேனியம் தேவை! நம் நாட்டுக்குள் 500 டன் யுரேனியம் மட்டுமே கிடைக்கிறது! நமக்குத் தேவையான யுரேனியத்தை நாம் #யுரோனிய வளம் உள்ள ஆஸ்திரேலியா கனடாவிடமிருந்துதான் பெறவேண்டும்! இதுவரை யுரேனியம் தர மறுத்து வந்த அவர்களுடன் ஆழ்ந்த நல்லுறவை வளர்த்தார் மோடி! அதன் விளைவாக கனடா வரும் 2027-35 வரையிலான எட்டு ஆண்டுகளில் பத்தாயிரம் டன் யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்திருப்பது ! உலகுக்கே ஆச்சரியம்! காரணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை நம்முடன் விரோதம் பாராட்டிய அது அணுகுண்டு தயாரிக்கும் நாடுகளுக்கு யுரோனியம் தருவதில்லை என்று முடிவு செய்திருந்தது. எல்லா நாடுகளும் நம் நட்பை வேண்ட கனடாவும் நமது நட்பை நாடியது! இது ஒரு பிரம்மாண்டமான மாற்றம்! அதுபோல சென்ற வாரம் ஆஸ்திரேலியா சென்ற மோடியுடன் அந்நாடும் நமக்கு யுரோனியம் தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இருக்கிறது. பிரதமர் மோடி 2014 முதல் சர்வதேச அளவில் அதற்கான தயாரிப்பை மேற்கொண்டு ஒரு அமைச்சகத்தின் கீழ் இருந்த வெளியுறவுத் துறையின் வீச்சைக் கையில் எடுத்துத் தானே உலகம் சுற்றும் தலைவராக மாறி பல உலக நாடுடன் ஆழ்ந்த உறவை ஏற்படுத்தி வலுப்படுத்தியுள்ளார்! அவர் கணித்தபடி கொரோனா காலத்தில் உலகக் கட்டமைப்பு கலகலக்க அதுதான் தருணம் என்று அவர் சுயசார்பு பாரத (ஆத்ம நிர்பர் பாரதம்} கொள்கையைப் பிரகடனம் செய்தார்! மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் உலக அரசியலில் சரித்திரம் காணாத அளவிலானது!அவர் பாரதப் பிரதமர்கள் யாரும் செல்லாத நாடுகளுக்குச் சென்றார்! மூன்று நான்கு தசாப்தங்களாக நமது பிரதமர்கள் செல்லாத நாடுகளுக்கும் சென்றார். அவரது பயணங்களில் பரப்பும் வீச்சும் வியக்கத்தக்கது! 2014ல் பிரதமரானது முதல் பிரான்ஸ் அமெரிக்காவுக்கு பத்து முறை ஜப்பான் அரபு அமீரகம் எட்டு முறை ரஷ்யா ஏழு முறை!சீன ஜெர்மனி ஏழுமுறை! நேபாளம் சிங்கப்பூர் ஆறு முறை! பூட்டான் பிரேசில் இந்தோனேசியா தென் ஆப்பிரிக்கா இலங்கை இங்கிலாந்து 4 முறை!..3

No comments:

Post a Comment

JULY 19