Monday, August 9, 2021

#பரம்பிக்குளம்_ஆழியாறு_திட்டத்தில்


 #பரம்பிக்குளம்_ஆழியாறு_திட்டத்தில் ஆரம்பத்தில் ஒன்றே முக்கால் லட்சம் ஏக்கருக்கு உருவாக்கப்பட்டு இன்றைக்கு 4.25 லட்சம் ஏக்கர் விரிவாக்கப்பட்டது யாரால்?

பி..பி திட்டம் உருவாக்கப்பட்ட போது முப்பத்தி இரண்டு டி.எம்.சி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டது.கடந்த ஐந்தாண்டுகளில் 12 டி.எம்.சிலிருந்து 18 டி.எம். சி தான் நமக்கு கிடைக்கிறது தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. பற்றாக்குறை நீரால் தான் பி..பி பாசனம் கேள்விகுறி ஆகியுள்ளது. காமராஜர் காலத்தில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் .எம்.எஸ் நம்பூதிரி பாட் முதல்வராக இருந்த போது மின்சாரம் தண்ணீரும் பங்கீடு செய்த ஒப்பந்தம் செய்தனர் .பி. . பி மட்டும் அல்ல சிறுவாணி திட்டம் அமைத்திட நாடாளுமன்றத்தில் சி. பி. எம் தலைவர்கள் பி.ராமூர்த்தியும் கே. ரமணியும் உரையாற்றிய வரலாற்று ஆவணத்தை மறைக்கமுடியுமா!

ஆழியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு மனக்கடவு வரை ஆழியாறு ஆற்று வழியாக கேரளாவிற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். அந்த தண்ணீரை ஆற்றுக்குள் சுமார் இரண்டாயிரம் மின்சார பம்புசெட்டுகளை சட்டவிரோதமாக பொருத்தி நமக்கு கிடைக்க வேண்டிய நீரை கேரளாவிற்கு கொடுக்கிறேன் என்று சொல்லி ஆழியாற்றின் வழியாக திறந்து விட்டு உருஞ்சி எடுக்கும் கனவான்கள் மீது ஏனோ நடவடிக்கை இல்லை .

பரம்பிக்குளத்திலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு வரும் தண்ணீரை வரப்பள்ளம் பணப்பள்ளம் ஊட்டுக்காள்வாய் நல்லாறு வழியாக குடிநீர்கென திறந்து கணக்கின்றி தண்ணீர் எடுக்கப்படுவதை யார் அறிவார் . ஏழுகுளத்திற்கு 2,890 ஏக்கருக்கு பதிலாக இருபத்தி ஐந்தாயிரம் ஏக்கருக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் எடுப்பது எப்போது தடுப்பது, ஏழுகுளத்திற்கு நீர் கொண்டு வரும் தளி வாய்க்காளில் கிணறுகளுக்கு 43 பைப்பு லைன் போட்டு தண்ணீரை உருஞ்சி எடுக்கின்றனரே , தளி வாய்க்கால் பைப்பு லையன்களையும் ஆழியாறு மின்சார பம்பு செட்டுகளையும் எடுக்க சொல்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் சொல்லியும் அசைக்க முடியாத தண்ணீர் திருட்டை தடுப்பது எப்போது என தெரியலையோ? கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில் இரண்டு பருவ காலங்களிலும் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் பல நூறு

டி. எம். சி உபரியாக திறந்து ஆற்றில் விடப்பட்டுள்ளது. உபரிநீரை கிருஷ்ணாபுரம்- தாசர்ப்பட்டி வழியாக உப்பாருக்கு அமராவதி ஆற்றில் வழிந்தோடும் நீரை கொண்டு வர வரைபடம் கலைஞர் ஆட்சியில் தயாரித்தனரே என்ன ஆனது அமராவதி அணை நிறைந்து வழிந்தோடும் உபரி நீர் உப்பாருக்கு மட்டும் அல்ல வட்டமலைக்கரைக்கும் மற்றும் வாய்க்கால் வரும் வழியோரம் உள்ள குளம் குட்டைகளும் நிரம்பி இருக்குமே ஏனோ அமராவதி உபரிநீர்- உப்பார் வட்டமலைகரை இணைப்பு திட்டம் மறந்து போனதே! நல்லாறு அணை திட்டம் அமைத்திட உப்பார் அணை நிரம்பிட அமராவதி உபரி நீரை கொண்டு வர வேண்டும்.

No comments:

Post a Comment

2023-2024