Monday, July 20, 2026

இது தென்காசியின் புறவழிச்சாலை..

 இது தென்காசியின் புறவழிச்சாலை.. வேலை ஆரம்பித்து சுமார் 4 வருடங்கள் ஆவது இருக்கும்.. சிறு சிறு பாலங்கள் கட்டி அப்படி அப்படியே கிடைக்கின்றது.. தென்காசி நகரத்திற்குள் அளவுக்கு மீறிய டிராபிக் உள்ளது..

அம்பாசமுத்திரம் டு கல்லிடைக்குறிச்சி பைபாஸ் சாலை குறுகிய மாதங்களிலேயே வெற்றிகரமாக நிறைவேற்றி திறந்து விட்டார்கள்.. இதில் மிகப்பெரிய ஆறான தாமிரபரணியில் சூப்பரான பாலமும் ஒன்று உண்டு வெற்றிகரமாக முடித்தார்கள். இதற்கிடையே தென்காசியில் உள்ள டிராபிக் போல் அம்பையில் கிடையாது. அம்பை நெருக்கடி ஆரம்பமாகி இருக்கும் நிலையில் இந்த பைபாஸ் சாலை மிகவும் வசதியாக உள்ளது. தென்காசியில் இவ்வளவு மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடி முத்தி போய் இருக்கையில்.. இந்த புறவழிச் சாலையை விரைந்து நடத்திட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா..? தென்காசி பகுதிகளில் மட்டும் எந்த அரசு வேலையாக இருந்தாலும் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.. கவனிக்கவும் நாதியில்லை... துரிதமாக விரைந்து செயல்படுத்திட தூண்டிடவும், அறிவுறுத்தவும் ஆளில்லை.. என்றே நினைக்கிறேன். #tenkasidistrict



No comments:

Post a Comment

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...