Wednesday, April 3, 2019

நீங்காநிகழ்வுகள்

#

 

கடந்த 10, 15 நாட்களாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் கனிமொழி அவர்களை ஆதரித்து கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 100 கிராமங்களுக்கு மேல் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறேன். 
2001 க்குப் பிறகு கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் பகுதிகளுக்கு அரசியல் ரீதியாக மக்களை சந்திக்கும் போது மக்கள் ஆர்வமாக பங்கேற்றனர். என்னய்யா கே.எஸ்.ஆரைப் பார்த்து ரொம்ப நாளாச்சு என்று அன்போடு விசாரிப்பது எனது 48 வருட அரசியல் வாழ்க்கையில் சற்று ஆறுதலாக இருந்தது. 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் கழக வேட்பாளர் கனிமொழி அவர்களுக்கு  ஆதரவு திரட்ட சென்றபோது கிராமத்து மக்கள், இன்றைக்கும் விவசாயிகளை பொருட்களுக்கு போதிய விலையில்லாமல் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வானம் பார்த்த கரிசல்காட்டு கந்தக பூமியில் விவசாயிகளை பார்க்கும்போது வேதனைப்படுத்துகிறது. தூத்துக்குடி தொகுதியில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய இப்பகுதியின் பிரச்சினைகளை பட்டியலிட்டு பதிவு செய்ததை படித்துவிட்டு இந்தத் திட்டங்கள் எல்லாம் வந்தால் நல்லது ஐயா.  குறிப்பாக கோவில்பட்டிக்கு இரண்டாவது குடிநீர் திட்டம் விரைவு படுத்த வேண்டும். அச்சன்கோவில் பம்பையை வைப்பதோடு இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற அதனுடன் அவற்றில் இருந்து வாய்க்கால் வழியாக விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளுக்கு விவசாயத்திற்காக நீரை கொண்டு வர வேண்டும். தென்னக நதிகளையும் குறிப்பாக இந்திய நதிகளையும் இணைக்க பல ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் மெனக்கெட்டு உள்ளீர்கள். மேலும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை தூர்வாரும் பாதுகாக்க வேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நடத்தி வருகிறீர்கள். அதுமட்டுமல்லாது விவசாயிகளின் கடன்களை தீர்க்க வேண்டும் அவர்களது சொத்துக்கள் மீது எடுக்கப்பட்ட ஜப்தி நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டியும், கடன் நிவாரண சட்டத்தை அமல்படுத்த வேண்டும் தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்றனர்.

தமிழக அரசியலில் காமராஜர் காலத்திலிருந்து இங்கு களப்பணி செய்து வந்தாலும் இப்பகுதியில் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக வராதது குறித்து வருத்தப்பட்டனர். மேலும் உங்களுக்கான வாய்ப்பு வரவில்லை என்று ஆதங்கத்தோடு கேட்டனர். இப்படியான விசாரிப்புகளும் அங்கீகாரமும் பொதுவாழ்வில் பெற என்ன பேறு செய்தேன் என்றெண்ணி பேருவகை கொள்கிறேன். இந்த மண்ணில்காமராஜர்,வைகோ,நாராயணசாமி நாயுடு ஆகியோருடன் பணியாற்றியதும், தலைவர் கலைஞர் திருச்செந்தூர் நடைபயணம் சென்றபோதும்...,வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத காலகட்டத்தில் கோவில்பட்டியில் ஆனந்தா விடுதியில் தங்கி இருந்ததும்; மேலும் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இரவில் பயணியர் விடுதியில் பின் அறையில் மாரடைப்பால் காலமானபோது அந்த சமயத்தில் உடன் இருந்ததையும் நெஞ்சில் நீங்காத பல நினைவுகளாக கோவில்பட்டி வட்டாரத்தோடு இருக்கிறது. தேர்தல் களில் வேட்பாளர், வேட்பாளர்களின் முகவர் என இந்த பகுதிகளில் 1970களிலிருந்து ஆற்றிய களப்பணிகள்......
விவாசயிகள் மீது காவல் துறையின் துப்பாக்கி சூடுகள்;13 விவசாயிகள் வெவ்வேறு கட்டங்களில்  பலி.....

எனஇத்தகைய பல நிகழ்வுகள் சற்று சஞ்சலத்தையும் ஏற்படுத்துகிறது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
03-04-2019

No comments:

Post a Comment