Friday, April 5, 2019

பரிதாபத்தில்கோவில்பட்டி #விவசாயப்பண்ணை.

#பரிதாபத்தில்கோவில்பட்டி #விவசாயப்பண்ணை
                1900 ல்  ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டதுதான்   கோவில் பட்டி  விவசாயப்பண்ணை. இந்தியாவிலேயே பழமையான அரசுவிவசாயப்
பண்ணையாகும்.கடந்த 2000 ல் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேயரால் #Blacksoil என்றும்,நம்மால்  கரிசல் மண்  என்றும் அழைக்கப்பட்டது.விருது நகரிலிருந்து திருநெல்வேலி வரை உள்ள பகுதிகளில்  முக்கிய  அடையாளமாக திகழ்ந்தது இந்தப் பண்ணை.    
        இயற்கை விவசாயி   நம்மாழ்வார்  இங்கே  பணியாற்றினார்.அப்போதே அவரோடு அறிமுகமுண்டு.அவர்  பேண்ட், சர்ட்  அணிந்து சைக்கிளில் வருவார்.1960களில்அவர்இங்கேபணியாற்றினார்














விவசாயப்பண்ணையில் பணியாற்றி
யவர்களில்  சிலர்   விவசாயப்
பல்கழகத்தில் துணை வேந்தர்கள் பொறுப்புக்கெல்லாம் வந்துள்ளனர்.



இங்கே நடத்திய பருத்தி விளைச்சல்  குறித்த ஆராய்ச்சி முடிவுகள்  யாவும் உலகப்புகழ் பெற்றதாகும்.

பருத்தியும்,மிளகாயும்  அதிகம் விளைகிற காரணத்தால் இந்த விவசாயப்பண்ணை கோவில்பட்டியில்  அமைக்கப்பட்டு;அது குறித்த  ஆராய்ச்சிகள்  நடத்தப்பட்டன.

டெல்லி#பூசாவில்விவசாயப்பண்ணை
யில் இதன்  ஆய்வுக்குறிப்புகள்  பாதுகாக்கப்பட்டு  அங்குள்ள  நூலகத்தில் இன்றும் இருக்கிறது.
 
அது மட்டுமல்ல பருத்தி விளைச்சலில் இந்தமையம்வழங்கியநடைமுறைகள்,
ஆலோசனைகள்ஆப்பிரிக்கா,தென்
அமெரிக்காநாடுகளில்கையாளப்
படுகிறது.

இந்த  வட்டார வானம்  பார்த்த  விவசாயிகளுக்கு  மண்பரிசோதனை,
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு  தீர்வு தந்த இந்த  பண்ணை இன்று  பரிதாப நிலையில் உள்ளது.

இந்த  வளாகத்தினிலுள்ள  நிலத்தில்  பயிரிடப்பட்டுள்ள  பயிர்கள் கூட  நல்ல  பராமரிப்பின்றி  காய்ந்துபோய்  உள்ளது.பச்சைப் பசேல்  என்று இருந்த மரங்களும் தன்னுடைய பச்சையை உதிர்த்து வெறும் மரங்களாகவே காட்சி  தருவது வேதனையாக இருக்கிறது.
 
நூறு  ஆண்டு  பழமையான    விவசாயப்பண்ணைப்  பற்றி மாநில அரசு பாராமுகமாக  இருக்கிறது.தேர்தல்  களப்பணிக்கிடையே இந்தப்
பண்ணைக்கு  இருபதாண்டுக்குப்  பிறகு சென்று  பார்க்கும்போது  மனம் ஒப்பவில்லை.

அரசுகளின் மெத்தனம் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதையும், மக்களும்  அவர்களின்  நலனும் எப்படியெல்லாம்  புறக்கணிக்கப்படுகிறது  என்பதைக்  காணும்போது  வருத்தம்  மேலிடுகிறது.

இந்த விவசாயப்பண்ணையில்  இதுவரை இருந்துதான் 54 வகை பயிர்களுக்கான புதிய ரகங்கள்  கண்டுபிடிக்கப்பட்டு  இந்தியாவெங்கும்  ஏன்  உலகெங்கும்  அறிமுகம்  செய்யப்பட்டது.
          
அவை பின்வருமாறு.........

கோவில்பட்டி விவசாயப்  பண்ணையால் வெளியிடப்பட்ட பயிர்  வகைகள்.
*******************
1-கருங்கண்ணிப்பருத்தி.கே.1,கே.2.கே5., கே.6..கே.7..கே.8..கே.9.கே.10..கே.11

2-கம்போடியா பருத்தி.....எம்.சி.யூ...6, கே.சி.1  கே.சி.எச்..1 கே.சி.2...

3-சோளம்.....கே.1 கே.2   கே.3    கே.4 கோவில்பெட்டி  நெட்டை,கே.5கே.6  கே.7...கே.8..கே.9..கே.10...கே.11

4-கம்பு...கே.1..கே.2..கே.3..கே.4..எச்.பி.....

5-கேப்பை......கே.1..கே.2..சாரதா..பி.ஆர்..202, கே. 5, கே.6  கே.7.......

6-மக்கச்சோளம்....கே.1...கே.2..எச்.எம்.

7-குதிரைவாலி...கே.1 கே.2...

8-திணை.....கே.1 கே.2 கே.3......

9-பனிவரகு.......கே.1 ., கே.2.....

10-வரகு....கே.1....

11-சாமை ...கே.1

12-குசும்பா...கே.1

13-சூரியகாந்தி......கே.1...கே.2....

14-உளுந்து....கே.1....

15-பாசிப்பயறு...கே.1...

16-மிளகாய்..கே.1.,கே..2

மொத்தம்----54 பயிர் வகைகள்.

#கோவில்பட்டிவிவசாயப்பண்ணை
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
05-04-2019


No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...