———————————————
இன்று (18-4-2019)தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடைய வாக்கை கோவில்பட்டி ஜோதிநகர் எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 232 ல் கழக வேட்பாளர் கவிஞர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் பதிவு செய்தேன்.
வாக்கை பதிவு செய்தபின் கோவில்பட்டி விளாத்திகுளம் சட்டமன்றத்திற்குட்பட்ட வாக்குச் சாவடிகளைப் பார்வையிட்டேன்.
ப.மு.பாண்டியன், டி.ஆர்.குமார்,வழக்கறிஞர்.குரு செல்லப்பா உடன் வந்தனர்.
இடைசெவல் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவை பார்வையிட்டேன்.
இந்தப்பள்ளிக்கூடத்தில் தான் தமிழின் மூத்தப் படைப்பாளி, கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா மழைக்காக ஒதுங்கியதாகவும் படிக்கச் செல்லவில்லையென்றும் அவரே கூறுவார்.மழைக்காக1930 களில் கி.ரா ஒதுங்கிய இப்பாடசாலை இன்று(2019) கனிமொழிக்கு வாக்குச் சாவடியாக விளங்குகிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-04-2019
No comments:
Post a Comment