Thursday, April 4, 2019

#மயில்தொல்லைகளும் #விவசாயிகளுக்குஇழப்புகளும்.

#மயில்தொல்லைகளும் #விவசாயிகளுக்குஇழப்புகளும். 
————————————————-
நாடாளுமன்ற தேர்தல் களப்பணி சுற்றுப் பயணத்திற்கு கிராமங்களுக்கு செல்லும்போது இடைச்செவல், வில்லிச்சேரி, சத்திரப்பட்டி, தோணுகால், படந்தபுளி, ஆவல்நத்தம் போன்ற கோவில்பட்டி, விளாத்திகுளம்,ஒட்டப்பிடாரம் வட்டார கிராமங்களுக்கு சென்றபோது நூற்றுக்கணக்கான மயில்கள் நடமாட்டத்தால் வெங்காயம், நவதானியம், கொத்தவரங்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை சாப்பிட்டுவிட்டு பயிர்களை அழித்துவிடுகிறது. இதனால் இந்த பயிர்களை நடவுசெய்த அப்பகுதி விவசாயிகளுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். 

இதுகுறித்து வனத்துறையிடம் சொல்லவேண்டுமென்ற கோரிக்கையை வைத்தனர். கோடை காலங்களில் தண்ணீர் இல்லாதபோதும், தொடர்ந்து விவசாயத்தையே தொழிலாக கொண்டு பாதுகாத்து வரும் விவசாயிகளுக்கு இதுபோன்ற இழப்புகள் தாங்கமுடியாதவை. 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
04-04-2019

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...