தேர்தல் பணி பயணங்களின்போது விளாத்திகுளம் பகுதி விவசாய நிலங்களில் பார்த்த காட்சிகளை பாரீர். விவசாயிகள் கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு விதைத்த வெங்காயமும், மிளகாயும், துவரைப் பயிரும் மண்ணில் காய்ந்து மகசூல் இல்லாமலேயே போய்விட்டாது.இந்த நிலையில் உழைத்த விவசாயி என்ன செய்வான்.
இயற்கைச் சூழலும், ஆட்சியாளுரும் விவசாயியை கைவிட்டால் அவனது கதி தற்கொலை தான். வானம் பார்த்த நிலங்களே எவ்வளவு பாலம், பாலமாக மண் பாழ்பட்டு இருக்கும் காட்சிகளை பார்த்தாலே வேதனையாக இருக்கிறது.
கோமல் சாமிநாதன் எழுதிய கதை இந்த மண்ணைப் பற்றியது தான். அதை தான் பாலச்சந்தரும் தண்ணீர் தண்ணீர் என்று படம் எடுத்தார். நிலத்தில் கரிசல் மண் எப்படி சோகமாக வளர்ந்து கிடக்கின்றது என்று பார்த்தாலே அனைவரையும் வாட்டி வதைக்கத்தான் செய்யும். இருப்பினும் விவசாயிகள் இந்த கரிசல் கந்தக வானம் பார்த்த மண்ணைக் கட்டிக் கொண்டு பாடுபட்டு கொண்டு தான் இருக்கிறார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-04-2019
No comments:
Post a Comment