Friday, April 5, 2019

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு

கடந்த 03-04-2019 அன்று நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியின் கழக வேட்பாளர் கவிஞர் கனிமொழியை ஆதரித்து கடலையூரில் பிரச்சாரம் செய்தேன். விடுதலைப் போராட்ட காலத்தில் அந்த கிராமத்தில் நடைபெற்ற 

 ், தடியடியும் நடைபெற்றது. அந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இருவர் மீது குண்டுக் காயங்கள் மற்றும் பலர் தாக்குதலில் படுகாயமடைந்தனர். அதன் பின்னர் நடந்த அடக்குமுறையில் 34 தியாகிகள் பல்வேறு சிறைச்சாலைகளில் கொடுந்துதுயருக்கும் ஆளானார்கள். இந்த தியாகத்தை போற்றும் வகையில் அந்த விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டி ஒரு கோரிக்கையை கடலையூர் மக்கள் காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய பேரவைத் தலைவர் செல்லப்பாண்டியன், அமைச்சர் மஜித் ஆகியோரிடம் 60களில் வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கை நிறைவேறவில்லை. பின்னர் நான் 1989 கோவில்பட்டி தேர்தலில் போட்டியிட்டபோது அந்த நினைவுச் சின்னத்தை அமைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தேன். ஆனால் வெற்றி கிட்டவில்லை. பின்னர் நடைபெற்ற 1996 சட்டமன்ற தேர்தலிலும் வாக்குறுதி அளித்தேன். ஆனால் வெற்றி பெறவில்லை. பல ஆண்டுகளுக்கு பின்னர் அந்த நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தூண் நிறுவப்பட்டதில் மகிழ்ச்சியே. ஆனால் போதுமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

#கடலையூர்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
05-04-2019


No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...