Tuesday, April 9, 2019

இன்றைக்கு #நதிநீர்இணைப்பை பற்றி பேசுகிறார்கள் என்றால் மகிழ்ச்சி தான். எல்லாம் காலவர்த்தமானங்கள் முடிவு செய்யும்

இன்றைக்கு #நதிநீர்இணைப்பை பற்றி பேசுகிறார்கள் என்றால் மகிழ்ச்சி தான். எல்லாம் காலவர்த்தமானங்கள் முடிவு செய்யும் 
———————————————-
நதிநீர் இணைப்பு, இணைப்பு என்று சொல்கிறார்கள். மகிழ்ச்சியே. சிலர் ஒப்புக்கு இதை ஆதரிக்கிறார்கள். நதிநீர் இணைப்பு வேண்டுமென்று 1983முதல் பொதுநல வழக்கை நான் தொடுத்து, கழகத்தின் சார்பில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடத்தும் பொறுப்பில் இருந்தபோது 27-02-2012இல் எனது நதிநீர் இணைப்பு வழக்கில் 29 ஆண்டுகளுக்கு பின் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்தது. அன்றைக்கு யாரும் கண்டு கொள்ளவில்லை. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப் போகிறேன் என்று மத்திய நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்த ஹரீஸ் ராவூத், இன்றைய உமாபாரதியை நேரில் சந்தித்து உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போகிறேன் என்று சொன்னபிறகு தான் மத்திய அரசு நதிநீர் இணைப்பிற்கான சாத்தியக்கூறுகளை குறித்து ஆராய குழு அமைத்தது.

இதற்காக நடையாக நடந்து அலைந்து 
திரிந்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றபோது, இந்த தீர்ப்பு எப்படி வந்துள்ளது என்றுகூட அறிய முற்படாதவர்கள், பலருக்கு இந்த 100பக்க தீர்ப்பை அனுப்பியும், அதை பார்த்து படிக்கக்கூட தவிர்த்த மனிதர்கள் இன்றைக்கு நதிநீர் இணைப்பை பற்றி பேசுகிறார்கள் என்றால் மகிழ்ச்சி தான். எல்லாம் காலவர்த்தமானங்கள் முடிவு செய்யும்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-04-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...