#நாடாளுமன்றதேர்தல் #கோவில்பட்டியில் சில சந்திப்புகள் ....
————————————————
நாளை வாக்குப்பதிவு இன்றைக்கு (17-4-2019)தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் குறித்தான பிரசாரத்துக்கு இடையில் மாலை முதல இரவு வரை கோவில்பட்டி நகரில் உள்ள பழைய நண்பர்கள்,மூத்த கட்சி பிரமுகர்கள் பல தரப்பினரையும் சந்தித்து நிலவரங்களையும் ஆதரவுகளையும் கேட்க வாய்ப்பு கிடைத்தது.
இதில் முக்கியமாக கழகதோழர் வி.சண்முகையா கிட்டத்தட்ட நாற்பது வருடத்திற்கு மேலாக கோவில்பட்டி 5வதுவார்டு செவக்காடுசங்கரலிங்கபுரம் செயலாளராக இருக்கின்றார். இன்றைக்கும், கழகத்தின் மீது அர்ப்பணிப்போடு ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் காவலாளியாக இருந்து கொண்டு கட்சிப் பணியில் மிகுந்த முனைப்போடு செயல்படுகிறார். அவரை சந்தித்த தருணம் மகிழ்ச்சியை அளித்தது.
அதேபோல கோவில்பட்டி கம்யூனிஸ்டுகளின் கேந்திரமாக விளங்கியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகர முன்னாள் செயலார் சி.ராம சுப்பு என்னோடு நீண்டகாலமாக நட்போடு தொடர்பில் உள்ளவர், இடைக்காலத்தில்நோய்வாய்ப்
பட்டிருந்தார். சில நிமிடத்துளிகள் தேனீர் அருந்திவிட்டு அவரோடு இருந்த பழைய நிகழ்வுகளை எல்லாம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரை போல தோழர் ஜி.ராமசுப்பு முக்கியமானவர்.
தெற்கு புதுகிராமம் மூன்றாவது தெருவில் உள்ள நாராயணகுரு சிலை அமைத்து அவரை போற்றக்கூடிய இடத்திற்கு க.அண்ணாதுரை அழைத்துச் சென்றார். இவர் நீண்ட காலமாக கழகத்தில் அர்ப்பணிப்போடு, எத்தகைய சிரமங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் தாங்கிக்கொண்டு கலைஞர் அவர்களின் பற்றாளராக எளிமையாக இன்றும் வாழ்ந்து வருகிறார். கழகத்தில் 40 ஆண்டுகாலமாக எந்த பதவியும் விரும்பாமல் கோவில்பட்டி கழகத்தின் புள்ளிகளில் ஒருவராக இருக்கின்றார். என்றைக்கும் என் மீதுஅன்பாக நேசமாக இருக்கிறவர். ப.மு. பாண்டியனுக்கும் எனக்கும் உள்ள பாசத்தை சொல்ல வேண்டியதில்லை. அண்ணன் பா. முத்தும் இதேபோலத்தான் மனதில் நினைக்கின்றேன். எம்.டி.ஏ. காளியப்பனை மறக்க முடியாது.வழக்கறிஞர் குரு செல்லப்பா 1989ல் காட்டிய மரியாதையும், பாசத்தையும் இன்றும் அதே போலவே இருக்கிறார். நாஞ்சில் குமார் தற்போதைய டி.ஆர். குமார் அன்றைக்கு உள்ள வேகம் இருக்கிறது. இன்றைக்கு வயது முதிர்ச்சி மற்றும் பக்குவம் பெற்றுள்ளார். வழக்கறிஞர் ராமச்சந்திரனும் பாசத்தை இன்றும் என் மீது வைத்துள்ளார்.
இவர்கள்........
1.மொழிப்போர் தியாகி (மிசா) ப. முத்து அவர்கள்
2. அ.கோ.சி. தங்கபாண்டியன் மற்றும் எம்.டி.ஏ. காளியப்பன்
3. மணியாச்சி பச்சம்மால்
4. தா மாறன்
5. 5வது வார்டு சங்கரலிங்கபுரம்
எம்.ராஜேந்திரன்
6. டிபி சண்முகையா,6வது வார்டு வேலாயுதபுரம்
7.6வதுவார்டு வேலாயுதபுரம் கேப்டன்
சுப்பிரமணியன்
8. 7வது வார்டு அ. விஜய பாண்டியன்
9.வழக்கறிஞர் மு. ராமச்சந்திரன்
10. புதுகிராமம் க. அண்ணாதுரை
11. புதுக்கிராமம் பொனுப்பிள்ளை
12. கடலையூர் ரோடு ஆர் ஏ பவுன்ராஜ்
13. பி.எம். முனியசாமி
14. டீக்கடை எம் ஆர் கணேசன்
15. ஈகா. வேலுச்சாமி
16. மீசை சோலையப்பன் பாரதி நகர்
17. பரமசிவ பாண்டியன்
18. எஸ் புஷ்பராஜ்
19. எம் சக்திவேல்
20. வழக்கறிஞர் குரு செல்லப்பா
21. கடலை கார தெரு,சட்ட எரிப்பு டி.ஆர். குமார்
22. தனுஷ்கோடியாபுரம் தெரு கிராமணி
23. தனுஷ்கோடியாபுரம் க. முத்துராஜ் (சோப்பு கம்பெனி)
24. அம்பேத்கர் தெரு எஸ் அன்பழகன்
25. கடலைக்கார தெரு வி நந்தகுமார்
26. சங்கரன் (டெய்லர்)
27.மந்தித்தோப்பு தெரு மீசை நவநீதன்
28. புதுக்கிராமம் எம் மங்களநாதன்
29. பாண்டவர்மங்கலம் சுப்பிரமணியன்
30.மகாலட்சுமி சுப்பிரமணியன்
31. பிச்சையா, உமா ஸ்டுடியோ
32.நான்காவது வார்டு பாப்பா குருசாமி.
இவர்கள் தலைவர் கலைஞர் அறிவித்த
அணைத்து போராட்டங்களில் பங்கேற்று
சிறை சென்றவர்கள்.
இவ்வளவு ஆறுதலாக கோவில்பட்டி நகரத்தில் இருந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. சற்று மனதிற்கு இதமாகவும் இருந்தது. இதில் கழகத்தில் 40 50 ஆண்டுகாலமாக இருக்கும் மூத்த கழகத்தின் முன்னோடிகள் என்று இன்றைக்கு இருக்கக்கூடியவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-04-2019
No comments:
Post a Comment