Monday, April 8, 2019

மீள் பதிவு-(7-4-2018 ) #ஸ்டெர்லைட், #கூடங்குளம்.........

மீள் பதிவு-(7-4-2018 ) #ஸ்டெர்லைட்#கூடங்குளம்.........
மறைந்த முன்னாள் அமைச்சர் செ. மாதவன் அவர்களுடன் நான் இருக்கும் புகைப்படத்தினை கோப்புகளில் தேடும் போது; 1990களில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக வைகோவோடு அவர்களோடு போராட்டப் பணிகள் செய்த தரவுகள் கிடைத்தது. வைகோவின் முதல் போராட்ட விளக்க பொதுக்கூட்டம் கோவில்பட்டியில் 22-2-97ல் என் தலைமையில் நடைபெற்றது.
ஸ்டெர்லைட், கூடங்குளம், காவிரி, முல்லை பெரியாறு,நதிநீர் இணைப்பு பிரச்சனை, கண்ணகி கோவில் பிரச்சனை, ஈழப் பிரச்சினையில் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஆரம்ப காலத்தில் போராடியது;இப்படி பல முக்கிய பிரச்சனைகளில்1980,90களில் இருந்து போராடினோம்.
அப்போது பலர் எங்கள்
போராட்டங்களை நையாண்டி செய்ததுண்டு. ஆனால் இன்றைக்கு இப்படியான பிரச்சனைகளுக்காக போராடினால் தான் பொது வாழ்வில் இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.அன்று நையாண்டி செய்தவர்கள் கூட இன்றைக்கு போராட வேண்டியிருக்கிறது.

ஸ்டெர்லைட் பிரச்சனையில் மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,இரு கம்யூனிஸ்ட் கட்சிகள்,ஜனதா தளம் போன்றவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து போராடி வருகின்றனர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும் இதில் ஈடுபாடு காட்டினார். ஆண்டன் கோம்ஸின் பணிகள் மறக்க முடியாதவை.
கூடங்குளத்தில் அணு உலை கட்டக்கூடாது என்று முதன்முதலில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவன் நான். கூடங்குளத்தில் டேவிட், ஓவியா போன்றவர்கள் பலர் ஆரம்ப காலத்திலிருந்து போராடினார்கள்..
இதையெல்லாம் கிண்டல் செய்த ஒருவர் பிற்காலத்தில் அமைச்சரானார், சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள்.இன்றைக்கு அவர்களே போராட வேண்டிய நிலை மாறியுள்ளது வெற்றி தானே...
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-04-2018
Image may contain: 4 people, people standing and wedding
Image may contain: 4 people, people standing and weddingImage may contain: 2 people, people smiling


No comments:

Post a Comment

*They say that time changes things, but actually you have to change them yourself*.

*They say that time changes things, but actually you have to change them yourself*. Happiness is not something you postpone for the future; ...