#ஒட்டப்பிடாரம்தொகுதியில் வாக்கு சேகரிப்பும், #கவிஞர்கண்ணதாசன், #வஉசி, தமிழ் அறிஞர் பண்டிதமணி #ஜெகவீரபாண்டியனார் நினைவுகளும்
_____________________________________
இன்று(14-4-2019)#தூத்துக்குடிநாடாளுமன்றவேட்பாளர்கவிஞர்கனிமொழி ஒட்டப்பிடாரம் கழக வேட்பாளர் சண்முகய்யா ஆதரித்து ஓனமாகுளம்,இளவேளங்கால்,
அயிரம்பட்டி,தென்னம்பட்டி, கொத்தாளி, பரிவள்ளிகோட்டை,ஒட்ட நத்தம்,மலைபட்டி, சங்கமபட்டி, மறவூர், ஆரக்குளம்,முறம்பன்,குலசேகரநல்லூர் போன்ற கிராமங்களில் ஆதரவு திரட்டினோம்.
ஒட்ட நத்தம் கிராமத்திற்கு சென்ற போது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் நினைவுகள் வந்தது.ஏனென்றால் அவரின் இளமைக்காலங்களில் ஒட்ட நத்தம் கிராமத்தில் உள்ள ஒரு பருத்தி அரவை ஆலையில் வேலை பார்த்ததாகவும்;1940 காலகட்டங்களில் ஆறுமாத காலம் இங்கே வசித்ததை என்னிடம் பலமுறை பகிர்ந்துள்ளார்.மற்றும் வ.உ.சி. தமிழறிஞர் பண்டித மணி ஜெகவீர பாண்டியனார் உலவிய கிராமம் தான் ஒட்ட நத்தம் என்பதும் நினைவில் வந்தது.
வாக்கு சேகரிப்பில் உடன் நாகம்பட்டிஇராமனுஜம், சட்டமன்ற உறுப்பினர் எல்.ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன், க.அண்ணாதுரை, டி.ஆர்.குமார், வழக்கறிஞர் குரு செல்லப்பா, சீனிவாசன், மறைந்த கலைஞரின் பாதுகாவலர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பாண்டியன், கோவிந்தராஜ் மற்றும் பலர்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-04-2019
No comments:
Post a Comment