#நாதஸ்வரவித்துவான் #காருக்குறிச்சி #அருணாசலம்
————————————————
இன்றைக்கு தேர்தலுக்காக வாக்குக்கேட்டு கிராமப்புறங்களுக்கு செல்லும் வழியில் கோவில்பட்டி புதுரோட்டில் மாவட்ட அரசினர் மருத்துவமனை எதிரில் காருக்குறிச்சி அருணாச்சலம் சிலையை காண முடிந்தது. இந்த சிலையை மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் தனது சொந்த செலவில் நிறுவினார். திறப்புவிழாவில் ஜெமினி கணேசன் - சாவித்திரி தம்பதி சகிதமாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
காருக்குறிச்சி என்ற ஆளுமையை தமிழக இசை வரலாற்றில் மறக்க முடியாது. கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் சந்தனக் கலர் சில்க் அரைக்கை சட்டை போட்டுக் கொண்டு செல்லையா தேவர் நெற்றி முழுவதும் விபூதி சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டு எப்போதும் இருப்பார். அவர் வருடம் ஒருமுறை காருக்குறிச்சியின் இசை நிகழ்ச்சியை கோவில்பட்டி பஸ் நிலையத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் நடத்துவது வாடிக்கை.
அவர் நாதஸ்வரத்தை வாசிக்க ஆரம்பித்தால் கூட்டத்தில் நிசப்தமாக ஒரு நெகிழ்ச்சி இருக்கும். இந்த வானம் பார்த்த கரிசல் மண்ணில் காருக்குறிச்சி ஒரு முக்கிய ஆளுமையாவார். அவரை விரும்பாத தமிழ் உள்ளங்களே கிடையாது. கிராவுக்கும்,
கு.அழகிரிசாமிக்கும் நெருக்கமான நண்பர்.
கி.ரா.வுக்கும்.கு.அழகிரிசாமிக்கும் .அவர் கெஞ்சகாலம்,
இடைசெவல் கிராமத்தில் குடியிருந்தார்,குருமலை கிராமத்தில் தான் கல்யாணம் பண்ணியிருந்தார் முதல் தாரம் மறைந்த பின்னால் ,அக்கா தங்கை என இரண்டுபேரையும் திருமணம் செய்திருந்தார் இந்த பகுதியில் நடக்கும் அனைத்து
சுபாகாரியங்களுக்கும் இவர்தான் நாதஸ்வரம் இவர் புகழ்பட அமைந்தது
டி.டி.கே.பிரதர்ஸ் கல்யாணம்தான்.
அந்தகல்யாணத்திற்க்கு,இவர்தான் நாதஸ்வரம்,கல்யணத்தை 16,எம்.எம் பிலிமில்.படம் எடுத்தார்கள்,அதை கெலம்பியா,ரிக்காடிங் தியேட்டரில் பார்த்தவர்கள் இதை இசை தட்டாகவெளியிட்டால் என்ன,என்ற எண்ணம் கொலம்பியாவுக்கு டி.டி.கே.விடம்கேட்டார்கள்
இசை தட்டாக வெளியில் வந்தது
இன்று வரை சுபகாரியங்கள் யாவுக்கும் அதுதான் மங்கள இசை,ஆனால் கல்யாணம் செலவு
யாவும் டி.டி.கே.வுக்கு கொலம்பியா கொடுத்தது காருகுருச்சிக்கு எதுவும் கிடைக்கவில்லை வருமையில் வாடினர்........ என செய்திகளும் பேசபடுகின்றது.
Karukurichi was born in karukurichi. But he lived in Kovilpatti. His grave is there on கடைலையூர்kadalaiyur road.
காருக்குறிச்சி அருணாசலம் அவர்கள் மகன் கோவில் பட்டி KTC டிப்போவில் மேலாளராக பணியாற்றினார். அவர் இருக்கின்ற வரைக்கும் அந்த சிலைக்கு பராமரிப்பு பணி நடந்து கொண்டிருந்தது. அதன் பிறகு இப்போது கேட்பாரற்றுக் கிடக்கிறது.
"கொஞ்சும் சலங்கை" படத்தில்,
எஸ். எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையமைப்பில், பாடகி எஸ்.ஜானகி அவர்கள் பாடிய "சிங்கார வேலனே" பாடலுக்கு நாதஸ்வரம் வாசித்தவர் இவரே. ஜானகி பாடியதும், இவர் நாதஸ்வரம் வாசித்ததும் இரு வேறு ஒலிப்பதிவுக் கூடங்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதென்றும், அதன் பிறகு இரண்டும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுப் பாடலானதெனவும் அறிந்தேன்.
"சாந்தா !! உட்கார், ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்? உன் இசையென்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா, தேனோடு கலந்த தெள்ளமுது, கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல். இந்தச் சிங்காரவேலன் சன்னதியிலே நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும். பாடு, பாடு சாந்தா, பாடு, ஏன் தயக்கம்?" என்னும் பிரசித்தி பெற்ற வசன நடை அமைந்ததும் இப் பாடலில் தான்.
"சிங்கார வேலனே" பாடல்:
https://www.youtube.com/watch?v=AX0o-_EXA1I
Main photo: Photographer unknown.
#karukurchiArunchalam
#காரக்குறிச்சி_அருணாச்சலம்
#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-03-2019
No comments:
Post a Comment