Friday, April 12, 2019

#தூத்துக்குடிநாடாளுமன்றதொகுதி-சில நினைவுகள்.....

————————————————
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு,திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் இருந்த விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, திருவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் சிவகாசி நாடாளுமன்ற தொகுதியிலிருந்து கோவில்பட்டி ஆகியவை இணைக்கப்பட்டது.

பழைய திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் தூத்துக்குடி நகரம் இருந்தபோது 1951, 57 இல் தாணுப்பிள்னை (காங்கிரஸ்), 1962இல் முத்தையா , 1967இல் சேவியர் (சுதந்திரா), 1971இல் முருகானந்தம் (இந்திய கம்யூனிஸ்ட்), 1977இல் ஆலடி அருணா (அதிமுக), 1980இல் டி.எஸ்.கே.சிவப்பிரகாசம் (திமுக), 1987, 1991 கடம்பூர் ஜனார்த்தனம் (அதிமுக), 1996இல் டி.எஸ்.கே.சிவப்பிரகாசம் (திமுக), 1998 பி.எச். பாண்டியன் (அதிமுக) ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்.
அன்றைக்கு திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி, ராதாபுரம், சாத்தான்குளம், கன்னியாகுமரி தொகுதிகள் உள்ளடங்கியிருந்தது. இந்த தொகுதிகளில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, தாணுலிங்கநாடார், கோசல்ராம், தனுஷ்கோடி ஆதித்தன், சிவகாசி தொகுதியில் வைகோ, வி.ஜெயலட்சுமி போன்றவர்கள் வெற்றி பெற்றனர். இது தூத்துக்குடி தொகுதியின்பழைய தேர்தல் தரவுகளாகும்.
#தூத்துக்குடிநாடாளுமன்றதொகுதி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-04-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...